சிவபெருமான் தலையில் கங்கா தேவி இருக்கும் காரணம்

2
சிவபெருமான் தலையில் கங்கா தேவி இருக்கும் காரணம் என்பது பற்றி நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவின் மூலம் சிறு பதிப்புகள் :


ஆகாயத்தில் ஓடிய புனித நதியே கங்கை. அதனாலேயே ஆகாய கங்கை என்று பெயர் பெற்றது. 

முனிவரின் சாபத்தால் சாம்பலாகிய தன் உடன்பிறப்புகளுக்கு சாப நிவர்த்தி அடைவதற்கு கங்கா தேவியை நோக்கி
பகீரதன் கடும் தவம் புரிந்தான்.

பகீரதனின் தவத்தை மெச்சிய கங்கை
அவன் முன் காட்சி அளித்து என்ன வரம்
வேண்டும் என்று கேட்க, அவனோ
தாங்கள் பூமியிலும் ஓடவேண்டும் தாயே என்று கூறினார்.

பகீரதனின் தவத்தில் மகிழ்ந்த கங்கா தேவி பூமியிலும் நதியாக ஓடத் தொடங்கினாள்.  இதனால் அனைவரும் சாப நிவர்த்தி அடைந்தனர்.

நாளடைவில் கங்கா தேவியின் வேகம் அதிகரித்துக் கொண்டே போனது. கங்கா தேவியின் தாக்கத்தை கட்டுப்படுத்த இயலாமல் அனைவரும் சிவபெருமானை நாடினர்.

அனைவரின் குறைகளை ஏற்ற சிவபெருமான், தன் ஜடைமுடியை
விரித்து அதில் கங்கையை இறங்கி, பின் பூமியை அடையும் படி செய்தார். இதனால் கங்கையின் வேகம் குறைந்தது. 

இதுவே சிவ பெருமான் தன் தலையில் கங்கா தேவிக்கு இடம் கொடுத்த காரணம்.

Post a Comment

2 Comments
  1. Replies
    1. அப்படியானால் உங்கள் மாற்றுக் கருத்தை தெரிவிக்கவும்.

      Delete
Post a Comment
To Top