சர்ப தோஷம் எதனால் ஏற்படுகிறது என்றும் அதற்கான பரிகாரங்கள் பற்றியும் நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவின் மூலம் சிறு பதிவுகள் :
நாகதோஷம் எப்படி ஏற்படுகிறது?
நாகதோஷம் என்பது நாகங்களால் மனிதனுக்கு உண்டாகும் ஒருவித தோஷம் ஆகும்.
சர்ப்ப தோஷம் வருவதற்கு சர்ப்பங்கள் ஒருவகையில் காரணம் என்றாலும் வேறு சில காரணங்களும் இருக்கின்றன.
சர்ப்பங்களை கொன்றவர்களுக்கும், இரை தேடி செல்லும் சர்பத்தை துன்புறுத்தியவர்களுக்கும், ஆண் நாகமும், பெண் நாகமும் ஒன்றாக இணைந்திருக்கும் சமயத்தில் அதை துன்புறுத்தியவர்களுக்கும், பாம்பு தன் குட்டிகளோடு இருக்கும் சமயத்தில் அதை துன்புறுத்தியவர்களுக்கும் மற்றும் பூர்வ ஜென்மத்தில் நாகங்களுக்கு செய்த பாவம் போன்றவத்தால் சர்ப்பதோஷம் வர வாய்ப்புகள் அதிகம்.
அடுத்தவரின் சொத்துக்களை அபகரித்தவர்களுக்கும், கெடுதல்கள் செய்து பிறரின் வருமானத்தை தடுப்பவர்களுக்கும், அடுத்தவர் குடும்ப பிரச்னையில் தலையிட்டு சிறிய பிரச்னையை பெரியதாக்கி குடும்பத்தையே பிரித்தவர்களுக்கும், வார்த்தையினால் அடுத்தவர்களை எப்போதும் புண்படுத்துபவர்களுக்கும் சர்ப்பதோஷம் வர வாய்ப்புகள் அதிகம்.
நாகதோஷத்திற்கான பரிகாரம்:
ராகு காயத்திரி மந்திரம் மற்றும் கேது காயத்திரி மந்திரம் ஆகிய இரண்டையும் தினமும் ஜெபிப்பதன் மூலம் சர்ப்ப தோஷம் அகலும்.
கும்பகோணத்தில் இருக்கும் திருநாகேஸ்வரம் கோவிலிற்கு சென்று வந்தாலும், திருப்பதி அருகே இருக்கும் காளஹஸ்தி கோயிலிற்கு சென்று வந்தாலும் சர்ப்ப தோஷம் உடனே அகலும்.
இதைத் தவிர உங்கள் இருப்பிடத்தின் அருகில் உள்ள நாகராஜ கோயிலுக்கு சென்று தங்கள் கையால் பசும்பால் மற்றும் மஞ்சள் பொடி இவற்றினால் அபிஷேகம் செய்வதாலும் இந்த தோஷத்தில் இருந்து விடுபடலாம்.
தான் யார் என்பதையே அறியாமல் மனநலம் பாதிக்கப்பட்டிருக்கும் மனிதர்களுக்கு மனதார உதவுவதன் மூலம் சர்ப்ப தோஷம் அகலும்.
ஓம் நமசிவாய