கார்த்திகை தீபமும் விளக்கேற்றும் முறையும்

0
கார்த்திகை தீபமும் விளக்கேற்றும் முறையும் பற்றி நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவின் மூலம் சிறு பதிப்புகள் :


கார்த்திகை தீப திருநாளானது கார்த்திகை மாதத்தில் வரும் கார்த்திகை நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது. 

திருவண்ணாமலையில் கார்த்திகைத் திருநாள் மிக சிறப்பாக கொண்டாடப்படும். பஞ்சபூதங்களில் நெருப்பிற்குரிய தளமாக விளங்குவது திருவண்ணாமலை ஈஸ்வரர் கோயில். 

இன்று மாலை 6 மணி அளவில் நம் வீடுகளில் நட்சத்திரங்கள் போல ஜொலிக்கும் அகல் விளக்குகளை ஏற்றி வழிபட வேண்டும். நாம் விளக்கு ஏற்றுவதற்காக ஊற்றப்படும் எண்ணையும், அதில் இடப்படும் திரியும் தன்னைக் கரைத்துக் கொண்டு நமக்கு பிரகாசமான ஒளியை தருகிறது. இது போல மனிதர்களும் தன்னலம் பாராமல் அடுத்தவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்பதை இந்த கார்த்திகை தீபம் உணர்த்துகிறது. 

அதுமட்டுமல்லாமல் தீபத்தை சிறப்பாக கொண்டாடப்படும் திருவண்ணாமலையில் தான் சக்தியும் சிவனும் அர்த்தநாரீஸ்வர கோலத்தில் கலந்தனர். இதனால் கணவன் மனைவி இருவரும் ஒன்றாக சேர்ந்து குடும்பத்தை சண்டை சச்சரவுகள் இல்லாமல் வழிநடத்தவும் இந்த கார்த்திகை தீபத்தை கொண்டாடலாம். 

தீபம் ஏற்றும் முறை :

கார்த்திகை தீபத்தன்று குறைந்தபட்சம் 27 தீபங்கள் ஏற்ற வேண்டும். இது 27 நட்சத்திரத்தையும் அதற்கான அதிதேவதைகளையும் குறிக்கிறது.

முதலில் பூஜை அறையில் விளக்கு ஏற்றி வழிபட வேண்டும். அதன்பின் முருகப்பெருமானின் அருகில் அனைத்து அகல் விளக்குகளையும் வைத்து தீபம் ஏற்றி வழிபட வேண்டும். பின் அதனை வீட்டைச் சுற்றி வைக்க வேண்டும்.

நாம் ஏற்றும் அகல் தீபமானது கிழக்கு திசை நோக்கி ஏற்றி வைத்தால் கஷ்டங்கள் விலகும். கிழக்கு அல்லது மேற்கு திசையில் விளக்குகள் இருக்க வேண்டும்.

குத்து விளக்கை வாசலில் ஏற்றி வைப்பவர்கள் சகல சௌபாக்கியங்களையும் பெற்று வாழ ஐந்துமுக ஏற்றி வழிபட வேண்டும். 

நன்றி 

ஓம் நமசிவாய

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top