காயத்ரி மந்திரம் ஜெபிப்பதால் உண்டாகும் பலன்கள்

0
காயத்ரி மந்திரம் ஜெபிப்பதால் உண்டாகும் பலன்கள் பற்றி நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவின் மூலம் சிறு பதிவுகள் :


உடலைத் தூய்மை செய்யும் வழியை போல உள்ளத்தைத் தூய்மை செய்யும் மந்திரம் காயத்ரி மந்திரம். இது மந்திரங்களின் தாய் மந்திரமாக கருதப்படுகிறது.

காயத்ரி மந்திரம்:
 
ஓம் பூர் புவஸ்ஸூவ
தத் சவிதுர்வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி
தியோ யோ ந: ப்ரசோதயாத்
 
விஷ்ணு பகவான் உலகை சிருஷ்டிக்க திருவுளம் கொண்டபோது அவரது முகத்திலிருந்து காயத்ரி மந்திரம் தோன்றியதாம். ஞானம் பெற விரும்பிய முனிவர்கள் வேதக் கடலைக் கடைந்த போது “த்ரயி” என்ற வேதசாரம் கிடைத்தது. அதனை காணமதி என்ற மத்தினால் கடைந்த  போது காயத்ரி தேவியின் வடிவம் தோன்றியது.
 
வேதத்தின் மூலாதாரமாக காயத்ரி மந்திரம் திகழ்கிறது. விஸ்வாமித்திரரின் தவத்தால் மகிழ்ந்த காயத்ரிதேவி மந்திரத்தை அவருக்கு உபதேசித்தாள். 
 
கயத்ரி மந்திரத்தை தாளம் தப்பாமல் கூறி தியானித்தால் பெரும் பலன் உண்டு. காப்பார்றும் எனப் பொருள்படும். அன்னை கயத்ரி தனது அபய கரங்கலால் நமது பயத்தைப் போக்கியருளவாள். நாடு சுபிட்சமடையவும் கொடிய நோய்கள் அகலவும் காயத்ரி மந்திரம் உதவும்.

இது புனிதமான மந்திரம் என்பதால் அசுத்தமான இடம் மற்றும் பயணத்தின் போது இந்த மந்திரத்தை உச்சரிக்க கூடாது.

இந்த ஒரு மந்திரத்தில் அனைத்து சக்தியும் அடங்கும். எனவே எந்த அம்மன் ஆலயத்தில் சென்றாலும் இந்த மந்திரத்தை கண்டிப்பாக உச்சரிக்க வேண்டும்.

அனைவரும் இன்புற்றிருக்க நினைப்பதல்லாமல் வேறொன்றும் அறியேன் பரா பரனே.

ஓம் சாந்தி சாந்தி சாந்தி !!!

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top