கண்ணாடி வளையலுக்கு பின்னால் இருக்கும் ரகசியங்கள்

0
கண்ணாடி வளையலுக்கு பின்னால் இருக்கும் ரகசியங்கள் பற்றி நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவின் மூலம் சிறு பதிவுகள் :


கண்ணாடி வளையல் என்பது அழகு சார்ந்த பொருட்களுள் ஒன்று. இதை பெரும்பாலும் கன்னிப் பெண்கள் மற்றும் சுமங்கலி பெண்களே அணிவார்கள்.

வளையல்களில் இரும்பு வளையல், தங்க வளையல், பித்தளை வளையல் என பல வகைகள் இருந்தாலும் அதில் கண்ணாடி வளையல்களுக்கு என தனி சிறப்புகள் உள்ளன.

இந்த கண்ணாடி வளையலில் இருந்து வெளிவரும் ஓசையானது மங்களகரமானது. இது நம்மையும் நம்மைச் சுற்றியுள்ள மக்களையும் சந்தோஷப படுத்துகிறது.

இதனாலேயே கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு என்ற பெயரில் அதிகமான கண்ணாடி வளையல்களை அணிகின்றனர். இந்த ஓசை வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு புத்துணர்ச்சியை ஏற்படுத்துகிறது.

சுமங்கலி பூஜை, வரலட்சுமி பூஜை போன்ற முக்கிய பூஜைகளில் போது கண்ணாடி வளையல் தானம் செய்யலாம். இவ்வாறு செய்வதால் வீட்டில் லட்சுமி கடாட்சம் உண்டாகும். 

வீட்டில் எப்போதும் கண்ணாடி வளையல் சத்தம் கேட்டுக்கொண்டிருந்தால் அந்த வீட்டில் மகிழ்ச்சியும் லட்சுமி கடாட்சமும் உண்டாகும் என்று ஐதீகம்.

மேலும் கன்னிப் பெண்கள் இந்த கண்ணாடி வளையலை அணிவதால் அவர்களைச் சுற்றி எந்த கெட்ட சக்திகளும் அண்டாது.

நன்றி

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top