கோயிலில் பொங்கல் பொங்கி வழிபடுவது ஏன் என்பதைப் பற்றி நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவின் மூலம் சிறு பதிவுகள் :
பொங்கல் பொங்கி வழிபடுவது என்பது பஞ்ச பூதங்களான நிலம், நீர், காற்று, நெருப்பு மற்றும் ஆகாயம் ஆகியவற்றிற்கு ஒப்பானது.
மண்பானை என்பது நிலம்,
அதில் நிரப்பப்படுகின்ற தண்ணீர்,
பற்ற வைக்கப்படுகின்ற நெருப்பு,
அது எரிய துணைபுரிகின்ற காற்று,
அதன் புகை செல்கின்ற ஆகாயம்
என்று பஞ்ச பூதங்களும் பொங்கலுடன் நிறைந்து நிற்கிறது.
பச்சரியில் பசு நெய் ஊற்றி, அதனுடன் வெல்லம், பால், முந்திரி, திராட்சை, ஏலம் சேர்த்து மணக்க மணக்க பொங்கல் வைப்பார்கள். இந்த பொருட்கள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு அர்த்தம் உண்டு.
பச்சரியும் பசுநெய்யும்
பச்சரிசி என்பது ஒருவரது பக்குவமில்லாத நிலையை காட்டுகிறது. அது பொங்கி வெந்த உடன் சாப்பிடும் நிலைக்கு வந்து விடுகிறது.
அரிசியுடன் வெல்லம், நெய், ஏலம், சுக்கு, உலர் திராட்சை என்ற அன்பு, அருள், சாந்தம், கருணை உள்ளிட்ட நல்ல குணங்களையும் கலந்து விடும்போது அது அருட்பிரசாதமாகி விடுகிறது.
மனம் என்ற அடுப்பில் இறை சிந்தனை என்ற நெருப்பை பற்ற வைப்பதின் மூலம் அது ஆண்டவன் விரும்பும் நிவேத்தியமாகிறது.
இதுவே ஆலயத்தில் பொங்கல் வைத்து வழிபடுவதன் விளக்கம்.