குலதெய்வ வழிபாடு பற்றி நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவின் மூலம் சிறு பதிவுகள் :


அமாவாசை குலதெய்வ வழிபாடு :

குலதெய்வ வழிபாட்டை எவர் ஒருவர் ஒழுங்காக செய்துக்கொண்டு வருகிறார்களோ அவர்களுக்கு இறைவனின் பரிபூரண அருள் கிடைக்கும். அதை அவர்களாலே உணர முடியும்.

அமாவாசை அன்று உங்கள் குல தெய்வம் கோவிலுக்கு சென்று இரண்டு மண்விளக்கு ஏற்றி, ஒரு எலுமிச்சபழத்தை கோவிலில் உள்ள சூலாயுதத்தில் குத்தி வைத்து உங்கள் குல தெய்வத்தை வழிபாடு செய்தால் நமது நீண்ட நாட்களாக நினைத்து வந்த நியாயமான கோரிக்கைகள் நிறைவேறும்.

குலதெய்வத்தை வழிபடும் முறை:

குலதெய்வ கோயிலுக்கு சென்று தம் குலதெய்வமான பிரதான மூர்த்தியை வழிபடுவதற்கு முன்பாக முதலில் ஆலயத்திற்கு வெளியில் அமைக்கப்பட்டுள்ள பலிபீடத்தினை வழிபட வேண்டும்.

அவர்களிடம் தான் தங்கள் குறைகளை கூற வேண்டும். அதன்பின் தான் ஆலயத்திற்கு உள் செல்ல வேண்டும்.

மூலவரை வழிபடும் போது நோர்மறையான கருத்துக்கள் தான் இருக்க வேண்டும். அதாவது நான் நினைத்த காரியங்கள் உன்னால் நிறைவேற்றப்பட்டது, உன் அருளால் மகிழ்ச்சி அடைகிறேன், இப்போது போல் எப்போதும் துணை நிற்க வேண்டும் என்று மனதார பிராத்திக்க வேண்டும்.

2 Comments

Post a Comment

Previous Post Next Post