நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து, மனபயம் நீங்கி தைரியமாக செயல்பட வைக்கும் வாராஹி மந்திரம் பற்றிய பதிவுகள்:


ஒரு மனிதனுக்கு எவ்வளவு பெரிய கஷ்டங்கள் வந்தாலும் அதனை ஏதாவது ஒரு வகையில் அவன் சமாளித்துக் கொள்வான். ஆனால் சில சமயங்களில் தான் செய்யாத தவறுக்கு, மற்றவர்களிடம் அவமானப்பட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுவிடும். நான் செய்யாத தவறுக்கு தண்டனையை அனுபவிப்பது என்பது மிகவும் கொடுமையான ஒன்று. இதை அனுபவரீதியாக அனுபவித்தவர்களுக்கு புரியும். 

இப்படி நாம் செய்யாத ஒரு தவறுக்கான பழி நம்மேல் விழும்போது, அதிலிருந்து நாம் எப்படி வெளிவருவது என்ற மன பயம் நமக்குள் வந்துவிடும். இதனால் நமக்கு ஏற்படும் தடுமாற்றமானது நம்மை பல சிக்கல்களில் சிக்க வைத்து விடும். இப்படிப்பட்ட இக்கட்டான நிலமையை மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் நிச்சயம் எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலையானது ஏதாவது ஒரு கட்டத்தில் வரும்.

அந்த இக்கட்டான சூழ்நிலையில் நம் மனதில் இருக்கும் பயத்தினை நீக்குவதற்கான ஒரு சிறந்த வழிபாடு தான் இந்த வாராஹி வழிபாடு. இந்த மூல மந்திரத்தை உச்சரிக்கும் போது நம்மை அறியாமலேயே நம் மனதிலுள்ள பயமானது நீக்கப்படும். 

ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் ஐம் க்லௌம் ஐம் || 

நமோ பகவதி வார்த்தாளி வார்த்தாளி 
வாராஹி வாராஹி வாராஹமுகி  வாராஹமுகி || 

அந்தே அந்தினி நமஹ| 
ருந்தே ருந்தினி நமஹ| 
ஜம்பே ஜம்பினி நமஹ| 
மோஹே மோஹினி நமஹ| 
ஸ்தம்பே ஸ்தம்பினி நமஹ| 
சர்வ துஷ்டபிரதுஷ்ட்டானாம் 
சர்வேஷாம் சர்வ வாக்சித்த 
சக்ஷூர்  முககதி ஜிஹ்வா 
ஸ்தம்பனம் குரு குரு 
சீக்ரம் வச்யம்,ஐம் க்லௌம் 
ட்டஹ ட்டஹ ட்டஹ ட்டஹ ஹூம் அஸ்த்ராய ப்பட் || 

தினம் தோறும் நம் மனதில் அந்த வாராஹி அம்மனை நினைத்துக் கொண்டு இந்த மந்திரத்தை உச்சரிப்பதன் மூலம் பயந்த சுபாவமானது மறைந்து, நம்மை அறியாமலேயே நம் மனதிற்குள் தன்னம்பிக்கையும், தைரியமும் வளர்ந்துவரும். அஷ்டமி திதியன்று நெய்தீபம் ஏற்றி வாராஹி அம்மனை வழிபடுவது மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்று. வாராஹி அம்மனுக்கு மாதுளம்பழம் நைவேத்தியமாக படைப்பது மிகவும் சிறப்பு.

Post a Comment

Previous Post Next Post