சிவன் கோயில்களில் காணும் அற்புதங்கள்

1
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து சிவன் கோயில்களில் காணும் அற்புதங்கள் :



திருக்கழுக்குன்றம்

திருக்கழுக்குன்றம் சிவன் கோயிலின் தெப்பக்குளத்தில் பன்னிரண்டு ஆண்டுக்குக்கொருமுறை கடலின்  ஆழ்கடலில் காணும் சங்கு உற்பத்தியாகி வெளி வருகிறது. இவற்றை சிவாச்சாரியார்கள் சேகரித்து மக்கள்பார்வைக்கு வைத்துள்ளனர். இங்குள்ள  மலையில் வீற்றிருக்கும் இறைவனுக்கு அபிஷேகம் நடக்கும்போது கழுகு வட்டமிடும்

கர்னாடகா சிவகங்கை

தமிழநாட்டின் சிவகங்கையைப் போல் கர்னாடகாவிலும்  ஒரு சிவகங்கை உண்டு.   பாங்களூரிலிருந்து 50 கிமீட்டர் தொலைலவில் உள்ளது.  இது குன்றோடு கூடிய ரம்மியமான இடம். இக்குன்றில் கங்காதீஸ்வரர் ஆலயம் உள்ளது.  இக்குன்றில் மகர சங்கராந்தியின் போது ஒரு அதிசயம் நடக்கும். 

இந்தகுன்றிலுள்ள பள்ளத்தில்  கடும் வெயில் அடித்தாலும் மகர சங்கராந்தி அன்று மாலைக்குள் மழை பொழிந்து  இப்பள்ளம் நிறைந்துவிடும். இந்நீரை கங்கை தீர்த்தமாக  கருதி இறைவனுக்கு அபிஷேகம் செய்வதற்கும்,  தங்களின் உடலில் தெளித்துக் கொள்கின்றனர்.மேலும் இவ்விறைவன் சிவலிங்கத்திற்குச் செய்யும் நெய் அபிசேகத்தின்போது நெய் வெண்ணையாக மாறும் அற்புதம் காணலாம்.


நிறம்மாறும் மீனாட்சி

சிவகங்கைமாவட்டம்  திருபுவனம் அருகேயுள்ள கல்லுமடை நாகேசுரமுடையார்  இரண்டாயிரம் வருடம் முந்தைய கோயிலின் மீனாட்சயம்மன் விக்கிரகம் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை பச்சை], மஞ்சள், ஊதா ஆகிய நிறங்களில் நிறம்ஓ மாறும்.


பன்னீர் தெளிக்கும் மரம்

திருநெல்வேலி ஆழ்வார்குறிச்சி மேற்கே ஐந்து கிமீ  தொலைவில் அத்ரிமலைக்கோயில் அத்ரி பரமேஸ்வரர் என போற்றப்படுகிறார். இங்கே நீண்டு உயர்ந்து  கம்பீரமாக வளர்ந்த  அம்ருத வர்ஷிணி  மரத்தின் எல்லா கிளைகளிலும் சித்திரை மாதம்  முழுவதும்  பன்னீர் துளிகளாக தெளிக்கப்படும் அற்புத நிகழ்வு நிகழ்கிறது.


தலக்காடு பாதாளேஸ்வரர்

மைசூரிலிருந்து 45கிமீ தொலைவில் காவிரி ஆற்றின் இடதுகரையில்  தலக்காடு பாதாளேஸவரர் ஆலயம் தரைப்பகுதியிலுருந்து 20அடிஆழத்தில் உள்ளது. இந்த பாதாளேஷவரர் காலையில் சிவப்பு நிறமாகவும், பிற்பகலில் கறுப்பு நிறமாகவும,் மாலையில் வெள்ளை நிறமாகவும் தினமும் மும்முறை நிறம் மாறி அருள் பாலிப்பது அற்புதமே.


ஔிவீசும் சிவலிங்கம்   நரிக்குடி

நரிக்குடி ஊராட்சி ஒன்றியம் கல்லுமடை என்னும் கிராமத்தில் அமைந்துள்ள இரண்டாயிரம் வருடம் முந்தைய திரு நாகேசுவர உடையார் கோயிலின் மூலவர் சிவலிங்கத்திலிருந்து அமாவாசை, பவுர்ணமி நாட்களில் இரண்டு கண்களிலிருந்தும் ஔி வீசும். இங்குள்ள அம்மன்  சிலை இரண்டு மாதத்திற்கு ஒருமுறை தானாகவே நிறம் மாறி பச்சை, மஞ்சள், ஊதா 7 நிறங்களில் காட்சியளிக்கிறது.


திருநல்லூர் பஞ்சவர்ணேஸவரர்

கும்பகோணதத்திலிருந்து மூன்று கி மீட்டர் தொலைவிலுள்ள திருநல்லூர்  மூலவர் கல்யாண சுந்தரேஷ்வரர் காலை ஆறுமணியிலிருந்து எட்டரை மணிவரை செப்புநிறமாகவும், காலை எட்டரை மணியிலிருந்து பத்தரை மணிவரை இளம் சிவப்பு நிறமாகவும்,  பத்தரை மணியிலிருந்து ஒருமணிவரை பொன் நிறமாகவும்,  ஒரு மணிக்குமேல் மூனறரை மணிவரை மரகதப்பச்சை நிறமாகவும்  இதற்குபின் சூரியன்  மறையும் வரை  இனம் காண முடியாத பற்பல நிறங்களில் பக்தர்களுக்கு  காட்சிக்கொடுத்து பரவசப்படுத்துகிறார்.


குனுப்புடி சோமேஷ்வரர்  ஆந்திரா

   ஆநதிராவின்  அமரராமம், ஸீரராமம், திரட்சாராமம் .,சோமராமம், குமாரராமம் என்ற ஐந்து தலங்களையும்  இராம சேத்திரங்கள்  என்கின்றனர். இவற்றில் சோம ராமம் கோதாவரி குனுப்படி என்ற கிராமத்தில் உள்ளது.  இக்கோயிலின் மூலவர் தேய்பிறை தினங்களில் நிறம் மங்கியும், அமாவாசையன்று கோதுமை நிறமாகவும், வளர்பிறை நாட்களில் சறிது சிறிதாக மாறி பவுர்ணமியன்று முழுவெண்மை நிறமாக அருள் பாலிப்பது ஆச்சரியம் ஆகும்.
பாறைக்குள் நீரூற்று பேறையூர்.


மதுரை மாவட்டம் மல்லிகார்ஜுன்

பேறையூரில் உள்ள மொட்டைமலையின் மல்லிகார்ஜுன் என்ற சிவன் கோயிலின் அடிவாரத்தில் வற்றா நீரூற்று உள்ளது.  ஆயிரம் அடி உயர கருங்கல் மலையிலிருந்து  இந்த சுனைக்கு எப்படி நீர் வருகிறது என்பது   இயலாத அதிசயமாக உள்ளது.


கேரளபுரம் வினாயகர்

கன்னியாகுமரி மாவட்டம் பத்மனாபபுரம் அருகிலுள்ள வினாயகபெருமான் ஆறுமாதங்கள் வெண்மைநிறமாகவும்( ஆவணிமுதல் தைமுடிய), பின்  மாசிமுதல் ஆடி வரை கறுப்பு நிறமாகவும் நிறம்மாறி  அருள் பாலிக்கிறார்.

Post a Comment

1 Comments
Post a Comment
To Top