நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து பொதுவாக சிவன் கோவிலுக்கு சென்றால் எப்படி வழிபட வேண்டும் என்பது குறித்த பதிவுகள் :


சிவன் ஆலயத்திற்கு சென்றவுடன் முதலில் சிவாய நாம என்று கூறி ராஜகோபுரத்தை முதலில் தரிசிக்க வேண்டும். பின் பலிபீடத்தில் நம் குறைகளை களைய வேண்டும்.

அதன் பிறகு கோவிலின் உள்ளே சென்ற பின் விநாயக பெருமானின் முன் தோப்புக்கரணம் போட்டு விநாயகர் காயத்ரி மந்திரம், மூல மந்திரம் மற்றும் விநாயகர் துதி இவற்றை கூறி வழிபட வேண்டும்.

அதன் பிறகு நந்தி தேவரிடம் “நந்தி தேவரே சிவபெருமானை தரிசிக்க வந்துள்ளேன், எம்பெருமானை தரிசிக்க நீங்கள் எனக்கு அனுமதி தர வேண்டுகிறேன் என்று கூறி அவரின் அனுமதியை பெற வேண்டும்.

நந்தி தேவரை வழிபடும் சமயத்தில் நந்தி காயத்ரி மந்திரத்தை ஜபிப்பது மிகவும் சிறந்தது. பின் நந்தி தேவரிடம் சென்று அவர் சிரத்தின் வழியாக சுவாமியை தரிசிக்க வேண்டும்.

அதன் பிறகு கருவறையில் இருக்கும் சிவனுக்கு அர்ச்சனை செய்து வழிபட வேண்டும். சிவனை வழிபடும் சமயத்தில் *ஓம் நம சிவாய* என்னும் மந்திரத்தை கூறி வழிபட வேண்டும்.

ஐயனை வழிபட்ட பிறகு அன்னையை வழிபட வேண்டும். அம்பாளை வணங்கிய பின்பு தென் முக கடவுளான தட்சிணாமூர்த்தியை வழிபட வேண்டும். தட்சிணாமூர்த்தியை வழிபடும் சமயத்தில் தட்சிணாமூர்த்திக்குரிய மந்திரத்தை ஜெபிக்க வேண்டும்.

அதன் பிறகு கோவிலை வளம் வந்து நவகிரகங்களை வழிபடலாம். பொதுவாக சிவன் கோவிலை வளம் வருகையில் மூன்று, ஐந்து, ஏழு என்ற எண்ணிக்கையில் வலம் வருவது நல்லது. வலம் வருகையில் “ஓம் நமசிவாய” என்று மந்திரத்தை ஜபித்தவாறே வலம் வர வேண்டும்.

இறுதியில் குறைந்தது ஒரு நிமிடமாவது கோயிலில் உட்கார்ந்து மனதிருப்தியுடன் வீடு திரும்ப வேண்டும்.

எல்லோரும் இன்புற்று இருக்க நினைப்பதே, அல்லாமல் வேறொன்றும் அறியேன் ஐயனே.

ஓம் நமசிவாய

Post a Comment

Previous Post Next Post