காலில் கறுப்பு கயிறு கட்டி கொள்வதால் கிடைக்கும் பலன்கள் பற்றி நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவின் மூலம் சிறு பதிவுகள் :
கறுப்பு நிறம் என்பது துக்கத்தின் அடையாளம்.
இதனால் பெரும்பாலானவர்கள் கறுப்பு நிறத்தில் ஆடை அணிய மாட்டார்கள்.
இருப்பினும் கருப்பு என்பது நம் வாழ்க்கையின் ஒரு முக்கிய அங்கமாக விளங்குகிறது. உடலிலுள்ள அடையாளங்களாக இருந்தாலும் சரி, உயர்த்தி காட்டப்படும் புத்தகத்தின் வரிகளாக இருந்தாலும் சரி.
கருப்புநிற கயிற்றினை நம் காலில் கட்டி கொள்வதால் நம்மை சுற்று தீய சக்திகள் நெருங்காது. அதேபோல் செய்வினை சூனியங்கள் நெருங்காது. கண் திருஷ்டி படாது. அது மட்டுமின்றி சனீஸ்வர பகவானின் பார்வையின் வேகத்தை இந்த கறுப்பு கயிறு குறைக்கிறது.
கறுப்பு கயிறில் 9 முடிச்சுகள் போட்டிருக்க வேண்டியது அவசியம். இதனை பிரம்ம முகூர்த்தத்தில் கட்டி கொள்ளலாம். அல்லது நண்பகல் 12 மணிக்கு கட்டலாம்.
மேலும் இதனை சனிக்கிழமையில் கட்டிகொள்வது சிறப்பு. இதை நம் வலது காலில் இதனை கட்டிகொள்ள வேண்டும்.
நீண்ட கால தீராத நோய், உடல் நல கோளாறுகள் இருந்தால், கறுப்பு கயிறை ஆஞ்சநேயர் கோவிலில் வைத்து கட்டி கொள்ளவேண்டும்.
இதனை கட்டும்போது துர்கா தேவி மற்றும் ஆஞ்சநேயரை மனதில் நினைத்து ராம ஜெயம் உச்சரிக்கலாம்.
எதிர்மறை ஆற்றலில் தாக்குதல் குறையும். பருவமடைந்த பெண்கள் ஆரம்பத்தில் வெளியே செல்லும் போது இதனை கட்டி விடுவது மிகப் சிறப்பு.
இந்த தகவல் மஹா மந்த்ர போதிணி நூலில் இருந்து ஓம் நமசிவாய ஆன்மீக குழு வழியாக பகிரப்பட்டது.
Useful message thanks for sharing
ReplyDelete