அனுமன் ஜெயந்தி விரதம் இருக்கும் முறை

1
அனுமன் ஜெயந்தி விரதம் இருக்கும் முறை பற்றி நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவின் மூலம் சிறு பதிவுகள் :


மார்கழி மாதம் அமாவாசை திதியும் மூல நட்சத்திரமும் இணைந்திருக்கும் நாளில் வாயு பகவானின் ஆசியுடன் அஞ்சனையின் மகனாக அவதரித்தவனே ஸ்ரீ ஆஞ்சநேயன். 

அனுமன் ஜெயந்தி அன்று விரதம் இருக்கும் முறை

அனுமன் ஜெயந்தி அன்று விரதம் இருப்பவர்கள் பிரம்ம முகூர்த்த வேளையிலேயே குளித்து, ராம நாமம் சொல்லி வணங்கி உபவாசம் தொடங்க ஆரம்பிக்க வேண்டும். 

கண்டிப்பாக அருகில் இருக்கும் ஸ்ரீ ராமர் அல்லது அனுமன் கோயிலுக்குச் சென்று பக்தியுடன் வழிபட வேண்டும்.

தங்கள் வசதியைப் பொறுத்து அனுமனுக்குத் துளசி மாலை, வடைமாலை, வெற்றிலை மாலை, வெண்ணெய்க் காப்பு சாத்தியும் வணங்கலாம்.

அன்று ஸ்ரீராமஜெயம் எழுதுவது நல்ல பலன்களை அளிக்கும். 

வீட்டில் பொரி, பழம், அவல், கடலை, சர்க்கரை, வெண்ணெய், தேன், பானகம், இளநீர் போன்றவைகளை நைவேத்தியமாக படைக்கலாம். அப்போது அனுமனுக்கான காயத்ரி மந்திரத்தைச் சொல்லி வழிபட வேண்டும்.

ஓம் ஆஞ்சநேயாய வித்மஹே,

வாயுபுத்ராய தீமஹி, தந்தோ

ஹனுமன் ப்ரசோதயாத்

வீட்டின் பூஜை அறை மற்றும் ஆலயத்தை தவிர மற்ற இடங்களில் இத்தகைய காயத்ரி மந்திரத்தை உச்சரிக்க கூடாது. 

காரணம், மற்ற மந்திரங்களை தவிர காயத்ரி மந்திரம் சக்தி வாய்ந்தது மற்றும் புனிதமானது. எனவே அசுபமான (சுத்தமில்லாத) இடங்களில் இம்மந்திரத்தை உச்சரிக்க கூடாது.

நீண்ட நாட்களாக தடை பட்ட காரியங்கள், மனக்குழப்பம், சனியின் பார்வை உள்ளவர்கள் இந்த விரதத்தை கடைபிடிப்பது சிறப்பைத்தரும்.

Post a Comment

1 Comments
Post a Comment
To Top