நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து கணபதி ஹோமம் செய்தால் கிடைக்கும் பலன்கள் பற்றிய ஒரு சிறு பதிவுகள் :
எந்த ஒரு செயலை செய்தாலும் முதலில் முக்கண் மைந்தனை ( விநாயகர் ) வணங்குவது மிக அவசியம்.
ஐந்து கைகளும், யானை முகமும் கொண்ட அந்த விநாயக மூர்த்தியை வணங்கி ஒரு செயலை செய்யும் போது அதில் அனுபவ ரீதியாக நன்மையில் முடியும் என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை.
இதனால் தான் வீடு, அலுவலகம், கோயில் போன்ற எந்த ஒரு கட்டிடங்கள் கட்டினாலும் முதலில் கணபதி ஹோமம் செய்ய பின்னரே அதை உபயோக படுத்துகின்றனர்
கணபதி ஹோமம் செய்வதால் உடல், மனம், ஆன்மிக அம்சங்களில் உள்ள தடைகள் நீங்கி வாழ்வில் வெற்றி கிடைக்கும். பொருளாதாரம், படிப்பு, ஆரோக்கியம் போன்ற தடைகளும் நீங்கும்.
மற்ற ஹோமங்களை துவங்குவதற்கு முன் கணபதி ஹோமம் செய்ய வேண்டியது மிகவும் அவசியம்.
வீடு அல்லது தொழில் துவங்குவதற்கு முன் கணபதி ஹோமம் செய்வதினால். குடும்பத்தில் உள்ளவர்களின் நோய்கள், தொழில் தடங்கள், மனக் குழப்பம், எதிர்மறை எண்ணங்கள் விலகி நன்மை உண்டாகும்.
மேலும் திருமண தடை, வேலையின்மை, தொழில் நஷ்டம் நீங்கி வெற்றியும், செல்வ செழிப்பும் வந்து சேரும்.
பஞ்ச பூதங்களில் ஒன்றான அக்னியை கொண்டு கணபதி ஹோமம் செய்யும் பொழுது அக்னியில் இருந்து வெளியாகும் அதிர்வுகள் உடலில் உள்ள சோர்வை நீக்கி புத்துணர்வு அடைய செய்யும்.
ஏதிர்பாராத விதமாக ஏற்படும் துர்மரணங்கள், விபத்துக்கள் இவைகளில் இருந்து பாதுகாக்கபடும்.
ஆண்டுக்கு ஒருமுறை கணபதி ஹோமம் செய்வதால் குடும்பத்தில் ஏற்படும் தேவையற்ற குடும்ப பிரச்சனைகள் வராமல் தடுப்பு சுவராக கணபதி ஹோமம் இருக்கும்.
கணபதி ஹோமம் செய்வதால் வீட்டில் உள்ள தீய சக்திகள் என்று அழைக்கப்படும் எதிர்மறை சக்திகள் வெளியேறி மாறாக நேர்மறை சக்திகள் அதிகமாகும்.
நன்றி
ஓம் நமசிவாய