நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து சித்திரை அமாவாசை பற்றிய சிறப்பு பதிப்புகள் :
அமாவாசை என்றாலே நம் அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது நம் முன்னோர்கள் தான்.
சித்திரை அமாவாசை அதாவது புத்தாண்டு துவங்கி முதலாவது வரக்கூடிய அமாவாசை என்பதால் இது முன்னோர்களை தரிசிக்க சிறந்த நாளாக கருதப்படுகிறது.
இந்நாளில் முன்னோர்களை வழிபட்டு அவர்களுக்கு பிடித்தமான உணவுகளை படையலிட்டு இயலாதவர்களுக்கு தானம் கொடுக்கலாம். ஏழைகளுக்கு அன்னதானம் கொடுத்தால் முன்னோர்களின் ஆசி கிடைக்கும்.
சித்திரை மாத அமாவாசை தினத்தன்று காலையில் குளித்து முடித்து, உங்கள் ஊரில் இருக்கும் ஆற்றங்கரை அல்லது குளக்கரையில் மைத்ர முகூர்த்த நேரம் எனப்படும் நேரத்தில் வேதியர்களை கொண்டு மறைந்த உங்கள் முன்னோர்கள், உறவினர்களுக்கு திதி தர்ப்பணம் தர வேண்டும்.
சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக அமாவாசை திதி, தர்ப்பணம் தர இயலாதவர்கள் அன்றைய தினம் உங்கள் வீட்டிலேயே முன்னோர்களை வழிபட்டு கருப்பு மற்றும் வெள்ளை எள் கலந்த சாதத்தை காகங்களுக்கு உணவாக வைப்பதால் முன்னோர்களுக்கு திதி அளித்த பலன் உண்டாகும். இந்த தினத்தில் விரதம் மேற்கொண்டு முன்னோர்களை வழிபடுவதால் பித்ரு சாபம், குல சாபம் போன்றவை நீங்கி நன்மை ஏற்படும்.
பதிப்பு : ஓம் நமசிவாய ஆன்மீக குழு
நன்றி
ஓம் நமசிவாய