லட்சுமி நரசிம்மர்

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து லட்சுமி நரசிம்மர் பற்றிய பதிவுகள் 


பரசுராமனின் தந்தையான ஜமதகனி முனிவரின் அருள் கடாட்சத்தில் தான் நாம் லட்சுமி நரசிம்ம மூர்த்தியை வழிபடுகிறோம்.

அதாவது பிரகலாதன் அழைத்ததும் அங்குள்ள தூண்களை பிளந்து கொண்டு வந்து காட்சி கொடுத்ததுப் போன்று தமக்கும் காட்சி கொடுக்க வேண்டும் என்ற ஆசையில் பல யாகங்களையும் நடத்தி வந்தார் முனிவர் ஜமதகனி.

முனிவர் நடத்திய அந்த யாகத்தீயின் நடுவில் உக்கிர கோலத்தோடு நரசிம்மர் தோன்றி அருளினார்.

முனிவரின் ஆசைப்படி உக்கிர கோலத்தில் தோன்றிய நரசிம்மரை பார்த்ததும் முனிவர் பரவசம் அடைந்தார். பரவசப்பட்ட ஜமதகனி அவர் உடல் சாந்தமாகவும், தான் பெற்ற நரசிம்ம தரிசனத்தை அனைவரும் பெற வேண்டும் என்று நரசிம்மரிடம் வரமாக கேட்டார்.

அந்த இடத்தில் பெருமாளும் லட்சுமியை தாங்கி லக்ஷ்மி நரசிம்மராக புன்னைகைத்தபடி அத்தலத்தில் நரசிம்மர் தோன்றி அருள் புரிந்தார். 

புகழ்பெற்ற நரசிம்மர் கோவில் சிறப்பம்சம்:

நங்கநல்லூரில் அமைந்திருக்கும் லட்சுமி நரசிம்மர் கோவிலின் சிறப்பம்சம் என்னவென்றால் ஐந்து தலை நாகத்தின் மேல் நரசிம்மர் அமர்ந்தபடியே பக்தர்களுக்கு அருள் கொடுப்பது தான் இந்த கோவிலின் சிறப்பு.

நரசிம்மர் கோவில் திருவிழா:

இந்த நரசிம்மர் கோவிலில் வருடாந்திரம் இரண்டு திருவிழாக்கள் நடைபெறும். முதலாவதாக நடைபெறும் திருவிழா நரசிம்ம ஜெயந்தி, அடுத்ததாக கிருஷ்ண ஜெயந்தி என்னும் திருவிழாக்கள் கோலாகலமாக நடைபெறும்.

லட்சுமி நரசிம்மர் கோவில் தலபெருமை:

கோவிலின் ஐந்து நிலை ராஜகோபுரம் கொண்ட மண்டபத்தின் தெற்கு பகுதியில் ரங்கநாதன் என்பவர் பள்ளி கொண்டுள்ளார். வடக்கு பகுதியில் நர்த்தன கிருஷ்ணர் ஆடும் நிலையில் இருக்கிறார். கிழக்கு திசையில் லட்சுமி நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருகின்றார்.

நான்கு கரத்தினை கொண்டு காட்சி தரும் நரசிம்மரின் மேல் இருக்கும் இரு கரங்களில் சங்கு, சக்கரம் தோன்றியிருக்கும். நரசிம்மர் சிலையின் வலது கீழ்கரத்தில் அபயமுத்திரையும், இடது கீழ்கரம், மடியில் மஹாலக்ஷ்மியை அணைத்தபடி நரசிம்மர் காட்சி தருகின்றார்.

இந்த நரசிம்மர் கோவிலில் சீனிவாச பெருமாள் சன்னதி, சஞ்சீவி ஆஞ்சநேயர் சன்னதி, பதினொரு ஆழ்வார்கள், ஆண்டாள், சக்கரத்தாழ்வார் போன்ற சன்னதிகள் அமைக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top