நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து விநாயகர் பற்றிய தகவல்கள் :
கணபதி என்றிட கலங்கும் வல்வினை
கணபதி என்றிட காலனும் கைதொழும்
கணபதி என்றிட கருமம் ஆதலால்
கணபதி என்றிட கவலை தீருமே
பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை
நாலும் கலந்து உனக்கு நான் தருவேன்-
கோலம் செய் துங்கக் கரி முகத்துத் தூமணியே! நீ
எனக்கு சங்கத் தமிழ் மூன்றும் தா!
விநாயகரின் 32 வடிவங்கள் :
இரணமோசன விநாயகர்.
உச்சிஷ்ட விநாயகர்.
உத்தண்ட விநாயகர்.
ஊர்த்துவ விநாயகர்.
ஏக தந்த விநாயகர்.
ஏகாட்சர விநாயகர்.
ஏரம்ப விநாயகர்.
சக்தி விநாயகர்.
சங்கடஹர விநாயகர்.
சிங்க விநாயகர்.
சித்தி விநாயகர்.
சிருஷ்டி விநாயகர்.
சுப்ர பிரசாத விநாயகர்.
சுப்ர விநாயகர்.
தருண விநாயகர்.
திரியாட்சர விநாயகர்.
துண்டி விநாயகர்.
துர்கா விநாயகர்.
துவி முக விநாயகர்.
துவிஜ விநாயகர்.
நிருத்த விநாயகர்.
பக்தி விநாயகர்.
பால விநாயகர்.
மகா விநாயகர்.
மும்முக விநாயகர்.
யோக விநாயகர்.
லட்சுமி விநாயகர்.
வர விநாயகர்.
விக்ன விநாயகர்.
வீர விநாயகர்.
வெற்றி விநாயகர்.
ஹரித்திரா விநாயகர்.
திதிகளில் வணங்க வேண்டிய பிள்ளையார் :
பிரதமை – பாலகணபதி
துவிதியை – தருண கணபதி
திருதியை – பக்தி கணபதி
சதுர்த்தி – வீர கணபதி
பஞ்சமி – சக்தி கணபதி
சஷ்டி – துவிஜ கணபதி
சப்தமி – சித்தி கணபதி
அஷ்டமி- உச்சிஷ்ட கணபதி
நவமி – விக்ன கணபதி
தசமி – ஷப்ர கணபதி
ஏகாதசி – ஹேரம்ப கணபதி
துவாதசி – லட்சுமி கணபதி
திரயோதசி – மகா கணபதி
அமாவாசை – விஜய கணபதி
பவுர்ணமி – கிருத்தகணபதி
கணபதிக்கு பிரியமான 21 ன் சிறப்பு :
ஞானேந்திரியங்கள்-5, கர்மேந்திரியங்கள்-5;
அவற்றின் காரியங்கள்- 5+5=10;
மனம்=1. ஆக மொத்தம் 21.
விநாயகரை பூஜிக்கும்போது ஞானேந்திரியங்களும் கர்மேந்திரியங்களும் ஒன்றுபடாவிட்டால் பலனில்லை. இதை நினைவுபடுத்தவே 21 என்னும் எண்ணிக்கை.
விநாயகரின் 21 பெயர்கள் :
ஆசாபூரன், ஏகதந்தன், கணேசன், கஜானனன், சர்வ பூஜ்யர், சித்தி புத்தி பதி, சிந்தாமணி, டுண்டிராஜன், தரணிதரன், நிஜஸ்திதி, பிரும்மணஸ்தபதி, மயூரேசன், மாங்கல்யேசர், லம்போதரன், வக்ர துண்டன், வரதன், விகடராஜன், விக்னராஜன், விநாயகன், ஜேஷ்டராஜன், ஹேரம்பன்
அபிஷேகப் பொருட்கள் 21 :
இளநீர், எண்ணெய், கருப்பஞ்சாறு, குங்குமம், சந்தனம், சந்தனாதித் தைலம், சீயக்காய், தண்ணீர், தயிர், திரவியப் பொடி, திருநீறு, தேன், நெய், பஞ்சகவ்யம், பழ ரகங்கள், பழப்பஞ்சாமிர்தம், பன்னீர்., பால், மஞ்சள் பொடி, மாப்பொடி, ரஸப்பஞ்சாமிர்தம்
மலர்கள் 21 :
அரளி, ஊமத்தை, எருக்கு, கண்டங்கத்திரி., கொன்றை, சம்பங்கி, செங்கழுநீர், செவ்வந்தி, செவ்வரளி, தாழம்பூ, தும்பை, பவளமல்லி, பாதிரி, புன்னை, மகிழம், மந்தாரை, மாதுளம், மாம்பூ, முல்லை, வில்வம், ஜாதிமல்லி
பூஜைக்குறிய இலைகள் 21 :
அரசு, அறுகம்புல், இலந்தை, ஊமத்தை, எருக்கு, கண்டங்கத்திரி, கரிசிலாங்கண்ணி, தங்க அரளி, துளசி, நாயுருவி, நெல்லி, நொச்சி, மருவு, மாசிபச்சை, மாதுளை, மாவிலை, வன்னி, வில்வம், விஷ்ணு கிரந்தி, வெண்மருதை, ஜாதி
நிவேதனப் பொருட்கள் 21 :
அதிரசம்., அப்பம், அவல், எள்ளுருண்டை, கரும்பு, கற்கண்டு, சர்க்கரைப் பொங்கல், சுகியன், சுண்டல், தினை மாவு, தேன், நாவற்பழம், பாகு, பாயசம், பால், பிட்டு, பொரிகடலை, முக்கனிகள், மோதகம், வடை, விளாம்பழம்
விநாயகருக்குரிய 11 விரதங்கள் :
வெள்ளிக்கிழமை விரதம்
செவ்வாய்க்கிழமை விரதம்
சதுர்த்தி விரதம்
குமார சஷ்டி விரதம்
தூர்வா கணபதி விரதம்
சித்தி விநாயகர் விரதம்
துர்வாஷ்டமி விரதம்
நவராத்திரி விரதம்
வெள்ளிப்பிள்ளையார் விரதம்
செவ்வாய்ப்பிள்ளையார் விரதம்
சங்கட ஹர சதுர்த்தி விரதம்
நன்றி.