பித்ரு சாபம்

1
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து பித்ரு சாபம் பற்றிய பதிப்புகள் :

பித்ரு என்றால் நம் முன்னோர்கள். நம் முன்னோர்களுக்கு நாம் கொடுக்க வேண்டிய மதிப்பு மரியாதை இவற்றை முறையாக கடைப்பிடித்தாலே பித்ரு சாபத்திலிருந்து விடுபடலாம்.

ஒருவர் உயிருடன் இருக்கும் தருவாயில் அவருக்கு எத்தகைய உதவியும் செய்யாமல் அவர் இறந்த பிறகு நாடுவது முறையல்ல.

பித்ரு என்றால் நம் தகப்பனார் வழியாக ஆறு தலைமுறையினரை குறிக்கும். தற்போதைய நடைமுறை வாழ்க்கையில் நம் தாத்தா, பாட்டி இவர்களை சந்தோஷப்படுத்தும் படி நடந்துக் கொள்ள வேண்டும்.

இவர்களை தரக்குறைவாக பேசுவது, மரியாதை இல்லாமல் நடத்துவது போன்ற செயல்கள் மற்றும் மனக் கவலைகள் ஏற்படும் வகையில் நாம் செய்யக் கூடிய ஒவ்வொரு விஷயமும் அவர்கள் மறைவுக்குப் பின் பித்ரு தோஷங்களாக மாறுகிறது.

பித்ரு தோஷமானது நம் ஆறு தலைமுறையினரை  தாக்கும் சக்தி வாய்ந்தது. எனவே அவர்கள் முறையாக வணங்கி அவர்களின் ஆசையை நிறைவேற்றுவது அவர்களை சாந்தப்படுத்துவதற்கு சமம்.

நம் முன்னோர்களின் ஆசி நமக்கு இருந்தால் மட்டுமே நாம் வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு செல்ல முடியும்.

பித்ருக்களின் கோபத்தை சாந்தப்படுத்தும் இடமாக திருப்பூந்துருத்தி திருத்தலம் அமைந்துள்ளது. இது சிறப்பு மிக்க சிவாலயங்களில் ஒன்று. இங்கு புஷ்பவனேஸ்வரர் என்ற திருநாமத்துடன் இறைவன் அருள்பாலிக்கிறார். இறைவியின் திருநாமம் சவுந்தரிய நாயகி ஆகும்.

திருவையாறைத் தலைமை தலமாகக் கொண்டு விளங்கும் சப்த ஸ்தானத் தலங்களில் இத்தலம் ஆறாவது தலமாகும். இந்த ஆலயத்தில் உள்ள கிணற்றில் நீராடினால் 13 புண்ணிய தீர்த்தங்களில் நீராடிய பலன் கிடைக்கும். இங்கு நீராடி இறைவனை வழிபட்டு பரிகாரம் செய்தால் பித்ரு தோஷம் நீங்கும்.

இதைத் தவிர,

தென் முனை, முக்கடலும் சங்கமிக்கும் இடம், ஸ்ரீ அனந்த பத்மநாதனின் சகோதரி கன்னியாக, குமரியாக வசிக்கும் இடம் , மாபெரும் புகழ் பெற்ற கன்னியாகுமரி கடற்கரையில் ஆடி அமாவாசை அன்று தற்பணம் கொடுக்க பித்ரு தோஷம் மற்றும் பித்ரு சாபத்திலிருந்து விடுபடலாம்.

நன்றி.

ஓம் நமசிவாய.

பதிப்பு : ஓம் நமசிவாய ஆன்மீக குழு.

Post a Comment

1 Comments
Post a Comment
To Top