நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து நடக்கவிருக்கும் சூரிய கிரகண வேளையின் சிறப்பு பற்றிய பதிப்புகள் :
சூரிய கிரகண வேளையில் நாம் உச்சரிக்கின்ற மந்திரத்திற்கு இரு மடங்கு சக்தி கிடைக்கும். அந்த மந்திரத்தை நீர் நிலைகளில் நின்று உச்சரித்தால் பல மடங்கு சக்தி பெருகும்.
பண்டைய காலங்களில் ஒரு குரு தன்னுடைய சிஷியர்களில் ( மாணவர்களில் ) சிறந்தவனை தேர்வு செய்து தன்னுடைய முழு கலைகளையும் உபதேசிக்கும் நாள் மற்றும் நேரமும் இதுதான்.
இந்த காலத்தில் ஒருவர் செய்கின்ற எந்த பூஜையாக இருந்தாலும் அந்த பூஜைக்கு உடனே பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.
சூரிய கிரகண வேளையில் அனைத்து கடவுள்களும் தியான நிலையில் அமர்ந்து விடுவார்கள், இதனால் தான் அனைத்து ஆலயங்களிலும் கடவுளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் ஆலயத்தை அடைத்துவிடுகிறார்கள்.
கிரகண நேரத்தில் செய்ய வேண்டியவை :
இந்த கிரகண வேளை அனைவருக்கும் பயன்படும் வகையில் தக்க சூழ்நிலையில் அமைந்துள்ளது. இந்த கிரகண நேரத்தை நாம் அனைவரும் நமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
கல்உப்பு ஆனது எதிர்மறை ஆற்றலை முறியடிக்கக் கூடியது. இதனால் முதலில் வீட்டின் அனைத்து வாசல் மற்றும் ஜன்னல்களிலும் சிறிது கல் உப்பை வைக்க வேண்டும்.
காலையில் குளித்து பூஜை முறைகளை முடித்து விட்டு காலை 10 மணியிலிருந்து மதியம் 2 மணிவரை இடைவிடாது ஓம் நமசிவாய என்ற பஞ்சாட்சர மந்திரத்தை உச்சரித்து கொண்டே இருப்போம். இதைத்தவிர லலிதா சஹஸ்ரநாமம் 1008 மந்திரங்களை படிப்பதும் உத்தமம்.
இந்த கிரகண நேரம் மந்திரம் படிப்பதற்கும், உபதேசம் பெறுவதற்கும் உகந்த நேரம். இந்த தருணத்தில் படிக்கும் மந்திரத்திற்கு பல மடங்கு சக்தி உண்டாகும்.
இந்த சூரிய கிரகணம் முடிவடையும் வரை நம் மீது சூரிய ஒளி படாமல் இருப்பது சிறப்பு. பின் 2 - மணிக்கு மேல் மீண்டும் குளித்து விட்டு நமது அன்றாட பணிகளை தொடங்க வேண்டும்.
ஜாதகத்தில் சூரிய கிரகணம்
ஜாதக ரீதியாக சூரிய கிரகணத்தை விவரிக்கும் போது சில குறிப்பிட்ட நட்சத்திரங்களுக்கு தோஷம் உண்டாகிறது. அந்த நட்சத்திரங்கள் பின்வருமாறு,
1. மிருகசீரிஷம்
2. சித்திரை
3. அவிட்டம்
4. ரோகிணி
5. திருவாதிரை.
இந்த நட்சத்திரங்கள் சூரிய கிரகணத்தினால் ஏற்படுகின்ற தாக்கத்திற்கு உள்ளாகின்றனர். இந்த நட்சத்திரக்காரர்கள் சூரிய பகவானுக்கு பிடித்த உணவான கோதுமையை தானம் அளிப்பதால் இத்தாக்கத்திலிருந்து விடுபடலாம்.
நன்றி
Post a Comment