சூரிய கிரகணம்

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து சூரிய கிரகணம் பற்றிய பதிப்புகள்

சூரிய கிரகணம் என்பது அமாவாசை நாளில் சூரியன், சந்திரன் மற்றும் பூமி இவை மூன்றும் துல்லியமாக ஒரே நேர்கோட்டில் சந்திக்கும் நேரமாகும்.

இந்த காலத்தில் சூரியனை வெறும் கண்களால் பார்க்கக்கூடாது என்றும் கிரகண வேளையில் வீட்டை விட்டு வெளியே செல்ல கூடாது என்றும் கூறுகிறார்கள். இதற்கு பலவிதமான காரணங்கள் உள்ளன.

அதாவது சாதாரண காலங்களில் சூரியனிடமிருந்து நம் உடலுக்கு தேவையான நேர்மறையான ஆற்றல்கள் வந்துக் கொண்டிருக்கும், ஆனால் இந்த கிரகண காலங்களில் சூரியனிடமிருந்து வருகின்ற ஆற்றல் எதிர்மறை ஆற்றல் கொண்டதாக இருக்கும்.

இதனால் தான் உடல்நலம் சரியில்லாதவர்கள், கர்ப்பிணி பெண்கள் மற்றும் சிறு குழந்தைகள் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்கிறார்கள்.

இதனை நாம் ஆன்மீக ரீதியாக எடுத்துக் கொள்ளும் போது ராகு மற்றும் கேது என்ற நிழல் கிரகங்களின் கட்டுப்பாட்டின் கீழ் சூரியன் இருக்கும் என்கின்றனர். ராகு மற்றும் கேது என்பது நாகம் என்பதால் இந்த கிரகண வேளையில் பாம்பின் ஆற்றல் அதிகமாக காணப்படும்.

இதனால் இந்த கிரகண வேளையில் உணவருந்த கூடாது என்றும் வீட்டிலுள்ள உணவு மற்றும் தண்ணீரை மூடி வைக்க வேண்டும் என்கிறார்கள். 

தர்ப்பை புல்லை பயன்படுத்துவதால் பாம்பிலிருந்து ஏற்படுகின்ற எதிர்மறையான ஆற்றல் தடுக்கப்படும். எனவே தர்ப்பை புல்லின் ஒரு சிறு பகுதியை எடுத்து நாம் சேமித்து வைத்திருக்கும் தண்ணீர் மற்றும் உணவுகளில் வைத்துக் கொள்வது சிறந்தது.

இந்த கிரகணம் நடைபெறும் சரியான நேரம் :

காலை 10:22 - ல் துவங்கி மதியம் 01:42 - ல் முடிவடைகிறது.

கிரகண காலம் என்பது இறை வழிபாட்டிற்கு உகந்த நேரம். இந்த காலத்தில் எவ்வாறு இறை வழிபாட்டில் ஈடுபடுவது என்பதைப் பற்றி நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவின் அடுத்த பதிவில் தெரிந்துக்கொள்ளலாம்.

நன்றி.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top