அமாவாசை பூஜை

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து அமாவாசை பூஜை பற்றிய பதிப்புகள் : -அமாவாசை என்பது சந்திரனின் முழு பார்வையும் பூமியின் மீது படாமல் இருக்கும் காலகட்டம் ஆகும். இந்த நாளில் சூரியனின் ஆதிக்கம் முடிந்ததும் பின் இருளின் ஆதிக்கம் அதிகரிக்கும். அதாவது எதிர்மறையான ஆற்றல்கள் அதிகரிக்கும் நேரமாக கருதப்படும்.

இதனாலேயே நம் வீடுகளில் சிறு குழந்தைகளை மாலை 6 மணிக்கு மேல் வீட்டை விட்டு வெளியே செல்ல அனுமதிப்பதில்லை. இதற்கு ஆன்மீக ரீதியாக பல காரணங்கள் கூறினாலும் அறிவியல் ரீதியாகவும் பல காரணங்கள் உள்ளன.

அதாவது சூரியன் மற்றும் சந்திரனின் ஒளிக்கதிர்கள் பூமியின் மீது படாமல் இருப்பதனால் ஒருவிதமான நச்சுத்தன்மை வாய்ந்த வாயுக்கள் பூமியை சூழ்ந்து இருக்கும். இவை நேரடியாக நம் மீது படும்போது நம் உடலில் ஒருவகையான ஒவ்வாமை நோய் ஏற்படுகிறது.
 
அமாவாசை நாள்களில் உலக நன்மைக்காக காளி பூஜை செய்தால் பலமடங்கு சக்தி கிடைக்கும். இந்த சக்தியை சிலர் தவறான முறையில் பயன்படுத்துகின்றனர்.

அமாவாசை அன்று நாம் வீட்டில் செய்யும் பூஜைக்கும் பலமடங்கு சக்தி உண்டு. அதாவது இந்த நாள் நம் நமது குலதெய்வங்களை வழிபடுவதற்கும் பித்ருக்களை வழிபடுவதற்கும் உகந்த நாளாக கருதப்படுகிறது.
 
ஒவ்வொரு அமாவாசை திதியிலும் நம் வீட்டையும் மற்றும் சுற்றுப்புறத்தையும் கடல்நீர் அல்லது உப்பு நீரால் கழுவ வேண்டும். 
 
மேலும் அன்று அசைவ உணவுகள் மற்றும் பூண்டு கலந்த உணவு இவற்றை தவிர்த்து விடவேண்டும். இந்த நாள்களில் வீட்டில் பித்ருக்களுக்கு படையல் படைத்து வழிபடுவதால் நம்மை சுற்றியுள்ள ஆபத்துக்கள் அகலும்.

இதைத்தவிர இந்த நாளில் குலதெய்வ வழிபாடு செய்வதும் குலதெய்வத்திற்கு படையல் வைத்து வழிபடுவதும் நமது 7 தலைமுறையினர் செய்ய பாவத்திலிருந்தும் குலதெய்வ சாபத்திலிருந்தும் நம்மை விடுவிக்கும்.

குறிப்பாக இந்த அமாவாசை நாட்கள் என்பது பித்ரு வழிபாட்டிற்கும், குலதெய்வ வழிபாட்டிற்கும் உருவாக்கப்பட்ட நாட்களாகவே கருதப்படுகிறது.

பதிப்பு : சிவா 

ஓம் நமசிவாய அறக்கட்டளை

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top