கங்கா ஸ்நானம் :
தீபாவளி அன்று அதிகாலை 3 மணி முதல் 5.30 மணிக்குள் எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும். இதனை கங்கா ஸ்நானம் என்பார்கள்.
தீபாவளி பூஜை:
தீபாவளி தினம் பொதுவாக ஒரு விரத நாள். இந்த தினத்தில் பகவான் கிருஷ்ணரை நினைத்தும், மகாலட்சுமி மற்றும் குபேரரை நினைத்தும் வணங்க வேண்டிய நாள். தீபாவளிக்கு முதலில் வீட்டை சுத்தம் செய்து தயாராக வைக்கவும்.
குளித்த பின்னர் நீங்கள் வாங்கிய புதிய ஆடைகளுக்கும், பொருட்களுக்கு மஞ்சள் குங்குமம் இட வேண்டும்.
கிருஷ்ணர், மகாலட்சுமி, குபேரரின் படங்களை வைத்து அவற்றிற்கு பூமாலை சாற்றவும். மண் அகல்விளக்கில் தீபத்தை ஏற்றவும்.
சுவாமி படங்களுக்கு முன் இலைகளைப் போட்டு நீங்கள் செய்த இனிப்பு பதார்த்தங்களையும், உணவு பொருட்களையும் சுவாமிக்கு பரிமாறுங்கள்.
பொதுவாக இந்த தீபம் + ஒளி = தீபஒளி என்பார்கள். அதனால் வீட்டில் கார்த்திகை தீபம் ஏற்றுவது போல பல அகல் விளக்குகளை ஏற்றி மின் விளக்குகளை அனைத்து தீப ஒளியில் இறைவனை பிரார்த்திப்பது நல்லது.
பெரியோரை வணங்குதல் :
பூஜை முடிந்த பின்னர், புத்தாடைகளை அணிந்து, மீண்டும் ஒரு முறை இறைவனை வணங்கி விட்டு, வீட்டில் உள்ள பெரியோரிடம் ஆசி பெறுங்கள்.
உங்களின் அக்கம் பக்கத்தினருக்கு இனிப்புகளை பரிமாறுங்கள். அவர்களிடமும் ஆசி பெறுவது மிகவும் சிறப்பும்.
இந்த முக்கியமான கொண்டாட்டத்தின் போது, ஏழை, எளியோருக்கு, ஒருவேளை உணவு கூட சரியாக கிடைக்காதவர்களுக்கு முடிந்த வரை புத்தாடை தானமும், உணவு தானம் செய்வது மகாலட்சுமியின் ஆசி முழுமையாகப் பெறலாம்.