லட்சுமி பூஜை முறை:
தீபாவளி அன்று தலைக்கு எண்ணெய் தேய்த்து குளித்துவிட்டு புத்தாடை அணிந்து, செல்வங்களின் தெய்வமாக கருதப்படும் லட்சுமிதேவிக்கு பூஜை செய்ய வேண்டும்.
பூஜைநேரம் அதிகாலை 5.1 முதல் 7.43 வரை என்று கூறப்படுகிறது. வீட்டிலேயே சுத்தமாக செய்யப்பட்ட எதாவது ஒரு இனிப்பை லக்ஷ்மிதேவிக்கு படைக்க வேண்டும். (கடவுளுக்கு படைக்கப்படும் மலர்கள் வாசனை உள்ளவையாக இருக்க வேண்டும். வாசனையுள்ள மலர்களை மட்டும் பூஜைக்கு பயன்படுத்த வேண்டும்)
லட்சுமிதேவி படத்திற்கு மாலை அணுவித்து, இரண்டு அல்லது ஐந்து நெய் தீபம் ஏற்றி ஒரு வெண்கல அல்லது பூஜை செய்வதற்கு ஏற்ற பாத்திரத்தில் தண்ணீர் நிரப்பி வைக்க வேண்டும். ஐந்து வகையான பழங்கள், இனிப்புகள், மலர்களை வைத்து லஷ்மிதேவிக்கு உண்டான மந்திரத்தை சொல்லி பூஜை செய்ய வேண்டும். இவ்வாறு, தீபாவளியன்று பூஜை , செய்தால் கஷ்டங்கள் விலகி தீபஒளியை போல் நம் வாழ்க்கை பிரகாசமாக இருக்கும்.
தீபாவளியன்று பூஜை செய்வதற்கான நேரம் மற்றும் காலம் :
லட்சுமி பூஜைக்கான நேரம்: 5.1 -7.43
காலம்: 1 மணி 56 நிமிடங்கள்
பிரதோஷ காலம்: மாலை 5.28 - 8.7
விருஷப காலம்: 5.28 - 7.24
அமாவாசை திதி துவங்கும் நேரம் - நவம்பர் 14,2020 பிற்பகல் 02.17 மணி
அமாவாசை திதி முடிவடையும் நேரம் - நவம்பர் 15,2020 அன்று காலை 10.36 மணி