நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து பெங்கல் தினச்சிறப்பு பதிவுகள் :

தை மாதம் சூரியன் சஞ்சரிக்கக்கூடிய மகர ராசியில் சனி, குரு, புதன் ஆகிய கிரகங்களுடன் சூரியன் இணைய உள்ளது பல ராசிகளுக்கு யோகபலன்களைத் தர உள்ளது

தேவலோக காலக்கணக்குப்படி, நம்முடைய ஓராண்டு என்பது, அவர்களுக்கு ஒருநாள். இதில், தைமுதல் ஆனி வரையுள்ள ஆறுமாதங்கள் பகல்பொழுது. இதனை உத்ராயணம் என்று குறிப்பிடுவர். இந்த காலத்தில் சூரியன் வடதிசை நோக்கிச் சஞ்சரிக்கும். 

ஆடிமுதல்மார்கழி வரை இரவுப்பொழுது. அப்போது சூரியன் தெற்குநோக்கி சஞ்சரிக்கும்.உத்ராயண காலத்தில் சுபநிகழ்ச்சிகளை நடத்துவது சிறப்பு.


சூரிய மந்திரம் :

நம: ஸவித்ரே ஜகதேச சக்ஷúஷே
ஜகத் ப்ரஸூதி ஸ்திதி நாச ஹேதவே
த்ரயீமயாய த்ரிகுணாத்ம தாரிணே
விரிஞ்ச நாராயண சங்கராத்மனே
ஜபாகு ஸும ஸங்காசம்
காஸ்யபேயம் மஹாத்யுதிம்
த்வாந்தாரிம் ஸர்வ பாபக்னம்
ப்ரணதோஸ்மி திவாகரம்

பொருள்

உலகிற்குக் கண்ணாக இருப்பவனே! முத்தொழில்களான படைத்தல், காத்தல், அழித்தல் ஆகியவற்றைச் செய்பவனே! வேத வடிவமே! முக்குணங்களைப் பெற்றவனே! பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்தியாகவும் திகழும் சூரியனே! உமக்கு நமஸ்காரம். காஷ்யப முனிவரின் மகனே! செம்பருத்திப்பூவின் நிறத்தைக் கொண்டவனே! இருளின் எதிரியே! பேரொளி உடையவனே! பாவங்களைப் போக்குபவனே! திவாகரனே! உம்மைப் போற்றுகிறேன்.

சூரிய தரிசனத்தை பார்த்த பிறகு சாப்பிட வேண்டும்

தாபனீய உபநிஷத் என்னும் நூலில் நரசிம்மருக்கு மூன்று கண்கள் உண்டு என குறிப்பிடப்பட்டுள்ளது. 
அதில் வலக்கண் சூரியன், இடக்கண் சந்திரன், நடுக்கண் அக்னியாக விளங்குகிறது. புருஷ சூக்தம் என்ற நூல், விஷ்ணுவின் கண்களில் இருந்து சூரியன் உண்டானதாகச் சொல்கிறது. சூரியனை வணங்காமல் சாப்பிடுவது கூடாது என வேதம் கூறுகிறது. சூரியவழிபாடைத் தவறாமல் செய்தால் வாக்குவன்மை, ஆரோக்கியம் உண்டாகும். சூரியனைக் காணாத நாள் ஒவ்வொன்றும் வீண்நாளே என்கிறார் காஞ்சிப் பெரியவர்.

கன்னி பூஜை:

பொங்கலன்று இரவில் கன்னி பூஜை நடத்தினால் குடும்பம் தழைக்கும். "கன்னி' என்பது நம் வீட்டில் வயதுக்கு வராமல் இறந்துபோன குழந்தைகளைக் குறிக்கும். இந்த குழந்தைகளின் வயதை அனுசரித்து புதிய பாவாடை, சட்டை, இனிப்பு வகைகளை திருவிளக்கின் முன் படைக்க வேண்டும். இறந்த கன்னியரை மனதில் நினைத்து பூஜை செய்யுங்கள். புத்தாடைகளை ஏழைகளுக்கு தானம் செய்யுங்கள். 

முன்னோர்கள் வழிபாடு

பொங்கலன்று மதியம் முன்னோரை அவசியம் வழிபட வேண்டும். திருவிளக்கின் முன், நம் முன்னோரின் படங்களை வைத்து மாலை அணிவியுங்கள். படம் இல்லாவிட்டால், அவர்கள் அங்கே எழுந்தருளியிருப்பதாக பாவனை செய்து கொள்ளுங்கள். ஒரு இலையில், வெற்றிலை, பாக்கு, பழம்,வெண்பொங்கல், சர்க்கரை பொங்கல், இனிப்பு, கார வகைகள், முன்னோர் விரும்பி சாப்பிட்ட காய்கறி வகைகளைப் படையுங்கள்.

இதுப்போன்ற பல பயனுள்ள தகவல்களுடன் மேலும் நமது ஓம் நமசிவாய குழுவின் ஆன்மீக பயணம் தொடரும்.

Post a Comment

Previous Post Next Post