பொங்கல் தின சிறப்பு

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து பொங்கல் தின சிறப்பு பதிவுகள் :

தை மாதத்தின் முதல் நாள்தான் சங்கராந்தி பண்டிகை என்றும் தைத்திருநாள் என்றும் பொங்கல் திருநாள் என்றும் கொண்டாடப்படுகிறது.

குடும்பமும் உறவுமாகச் சேர்ந்து கொண்டாடப்படும் மிக முக்கியமான பண்டிகை பொங்கல் பண்டிகை. இதனை சூரியப் பொங்கல் என்றும் அழைப்பதுண்டு. சூரிய பகவானுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும் இது கொண்டாடப்படுகிறது.

புதிதாக மண்பானை வாங்குவதும் அதில் பொங்கல் வைப்பதும் தொன்றுதொட்டு நிகழ்ந்து வருகிறது. பெரும்பாலான வீடுகளில், வாசலில் அடுப்பிட்டு பொங்கல் வைக்கிற வழக்கம் இன்றைக்கும் நடைமுறையில் உள்ளது.

அரிசியும் வெல்லமும் இட்டு பொங்கல் வைத்து, சூரிய பகவானுக்கு அதைப் படைத்துவிட்டு, பொங்கும் தருணத்தில் ‘பொங்கலோ பொங்கல்’ என்று கோஷங்கள் எழுப்பி பொங்கல் பண்டிகையைக் கொண்டாடுவார்கள் மக்கள்.

இயற்கையான சூரியனை வணங்கும் பொங்கல் பண்டிகை, மறுநாள் கால்நடைகளைக் கொண்டாடி வணங்கிப் போற்றும்விதமாக மாட்டுப் பொங்கல் என்றெல்லாம் கொண்டாடப்படுகிறது.

இதன் பின்னர், சொந்தபந்தங்களுடனும் உறவுகளுடனும் இணைந்து வம்சம் செழிக்கவும் தலைமுறை செழித்தோங்கவும் காணும் பொங்கல் எனும் வைபவமும் நடைபெறும்.

இப்படி, உணர்வுடன் கலந்த விழாவாகக் கொண்டாடப்படுகிறது பொங்கல் திருநாள்.

பொங்கல் வைக்க உகந்த நேரம் :

காலை :- 11.00 - 12.00 அல்லது காலை :- 08.09 - 09.00.

அதாவது காலை 11 மணி முதல் 12 மணிக்குள் பொங்கல் வைக்கலாம். அதற்கு முன்னதாகவே பொங்கல் வைத்து பூஜிக்க நினைப்பவர்கள், காலை 8.09 மணி முதல் 9 மணிக்குள் பொங்கல் வைத்து வழிபடலாம்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top