நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து மா இலையில் மருத்துவ குணங்கள் பற்றிய பதிவுகள் :
மா இலையில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன. நம் தமிழர்களின் விழாக்களிலும் பூஜைகளிலும் மா இலை முக்கியமாக பயன்படுத்தப்படுகிறது. மக்கள் அதிகமாக கூடும் விழாக்களில் மா இலை தோரணமாக கட்டி தொங்கவிடப்படுகிறது. இதற்கு முக்கிய கரணம் ஒருவருக்கு ஏற்படும் சுவாச பாதிப்பு மற்றவர்களுக்கு பரவாமல் தடுக்க மா இலையை தோரணமாக கட்டிவைக்கின்றனர்.
மா இலை மருத்துவ பயன்கள்
மாந்துளிரும் மாதுளை இலையையும் அரைத்து பெரியவர்களுக்கு நெல்லிக்காய் அளவு சிறியவர்களுக்கு சுண்டக்காய் அளவு மோரில் கலந்து காலை, மாலை கொடுக்க சீதபேதி, இரத்த பேதி, வயிற்றுக்கடுப்பு தீரும்.
மா இலைகளை வேகவைத்து வடிகட்டி கசாயமாக குடித்து வந்தால் உடலில் நீரினால் ஏற்படும் நோய்கள் அனைத்தும் தீரும்.
இளம் மா இலையை தேனில் ஊறவைத்து சாப்பிட்டு வர சுவாச பாதிப்புகளால் ஏற்படும் தொண்டைக்கட்டு, குரல் கம்மல் ஆகியவை தீரும்.
மாவிலையை தண்ணீரில் கொதிக்கவைத்து நன்றாக ஆறியபின் வாய்கொப்பளிக்க அதிக எச்சில் சுரப்பு கட்டுப்படுத்தப்படும். பற்களின் ஈறுகளும் உறுதியாகும். தொற்று கிருமிகள் இருந்தாலும் நீங்கும்.
மாவிலை குடிநீரை குடித்து வர நுரையீரல் சம்பந்தமான நோய்கள் தீரும்.
மா இலையை காயவைத்து பொடியாக செய்து வைத்துக்கொண்டு இரவினில் தண்ணீரில் கலந்து அதிகாலை பருகிவர சிறுநீரக கற்கள் உடைந்து வெளியேறிவிடும்.