ஶ்ரீராஜமாதங்கி நவராத்திரி வைபவம்

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து ஶ்ரீராஜமாதங்கி நவராத்திரி வைபவம்!!

கலைமகள், மலைமகள், அலைமகள் என மூவரின் அம்சமும்கொண்ட அன்னையாக ஸ்ரீ ராஜ மாதங்கி வடிவெடுத்தாள். இதனால் அரச பதவி வேண்டுவோர் முக்கிய தெய்வமாக எண்ணி வழிபடத் தொடங்கினர். அரச போகத்தினை அளிக்கும் இந்த தேவியின் அங்க தேவதைகளாக ஹசந்தி ஷ்யாமளா, சுக ஷ்யாமளா, சாரிகா ஷ்யாமளா, வீணா ஷ்யாமளா, வேணு ஷ்யாமளா, லகுஷ்யாமளா என ஆறு தேவியர் தோன்றி கலைகளின் அதிபதியாகினர். 

`லலிதா சகஸ்ரநாமம்’, `ஸ்ரீசாக்த ப்ரமோதத்தம்’, `மீனாக்ஷி பஞ்சரத்னம்’, `ஸ்ரீவித்யார்ணவம்’, `சாரதா திலகம்’, `நவரத்ன மாலா’ போன்ற பல நூல்களில் அன்னை ராஜ மாதங்கியின் புகழும் வரலாறும் போற்றிப் பாடப்படுகிறது. சாக்த ப்ரமோதத்தில் இந்த அன்னை, இசைவாணியாகவும், வாக் தேவதையாகவும் வர்ணிக்கப்பட்டு வணங்கப்படுகிறாள். ஆக, கலைகளின் தேவதையாகவும், அரச போக வாழ்வை அளிப்பவளாகவும் இவளே விளங்குகிறாள். 

கலைகளில் தேர்ச்சி பெற, பதவி உயர்வு பெற, வாக்கு வளம் பெற இவளை வணங்கலாம். நவாவர்ண பூஜையும், குங்கும அபிஷேகமும் இந்த அன்னைக்கு பிடித்தமானது. மீனாக்ஷி அன்னையே ராஜ மாதங்கியின் அம்சம்தான் என்பதால், மீனாட்சியை வணங்குவதே ராஜ ஷியாமளாவை வணங்குவது போல்தான். 

வடநாட்டில் ஷ்யாமளா வழிபாடு மிகப் பிரபலமானது. சியாமளா நவரத்னமாலை, சியாமளா ஆவரணம், மாதங்கி ஸஹஸ்ரநாமம், சியாமளா தண்டகம், சியாமளா கவசம், மாதங்கி ஹ்ருதயம், ராஜமாதங்கி மந்த்ரம், மாதங்கி ஸ்தோத்திரம், மாதங்கி ஸுமுகி கவசம், ஸ்யாமளா ஸஹஸ்ரநாமம் போன்ற பல துதிகள் இந்த அன்னையின் புகழைப் போற்றுகின்றன. பூவுலகின் எல்லா மனிதர்களும் சகல கலைகளிலும் தேர்ச்சிபெறவும், செல்வ வளத்தினைப் பெறவும் அவதரித்தவள் அன்னை ராஜ மாதங்கியை வணங்கி சகல நன்மைகளும் பெற்று வாழ வேண்டுகிறோம்.

இன்று தசமி திதி செம்பாக்கம் ஸ்ரீமத்ஔஷத லலிதா மஹாதிரிபுரசுந்தரி ராஜதர்பார் மந்திரிணீ ஸ்ரீ பால சரஸ்வதி ராஜமாதங்கியின் அனுக்கிரகத்தால் மாணவ, மாணவிகள் அதீத ஞாபக சக்தியும், கலை ஞானத்தையும் பெற விசேஷ ஸ்ரீவித்யா அபிவிருத்தி சங்கல்ப சகஸ்ரநாம அர்ச்சனை, ஸ்ரீபாலா மூலமந்திரம் கூட்டுப்பாராயணம்,
ஸ்ரீராஜமாதங்கி தேவிக்கு சிறப்பு அலங்காரம், விஷேச, சோடச மகாதீபாரத்தி தரிசனம், அன்னதானம் நடைபெறுகிறது.

அனைவரும் குழந்தை ஸ்ரீபாலா,  ஸ்ரீராஜமாதங்கியின்  அருள் பெறுக!

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top