ஶ்ரீராஜமாதங்கி நவராத்திரி வைபவம்

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து ஶ்ரீராஜமாதங்கி நவராத்திரி வைபவம் பற்றிய பதிவுகள் :

அன்னை இராஜமாதங்கி தேவிக்கு சியாமளா ஸஹஸ்ரநாமம், சியாமளா தண்டகம், சியாமளா அஷ்டோத்திரம், என்று பல்வேறு ஸ்தோத்திரங்கள் உண்டு., அன்னை சியாமளா தேவியை மேற்சொன்ன ஸ்தோத்ரங்களைச் சொல்லி வழிபட நேரம் இல்லாதவர்கள் கீழ்காணும் 16 நாமங்களால் அன்னை சியாமளா தேவியை அர்ச்சித்து அனைத்து நலன்களையும் பெறலாம்.

1.சங்கீதயோகினி
2.ச்யாமா
3.மந்த்ரநாயிகா
4.ச்யாமளா
5.மந்த்ரிணீ
6.ஸசிவேசானீ
7.ப்ரதானேஸ்வரி
8.ஸுகப்பிரியா
9.வீணாவதி
10.வைணிகீ
11.முத்ரிணீ
12.ப்ரியகப்ரியா
13.நீபப்ரியா
14.கதம்பேசீ
15.கதம்பவனவாஸினி
16.ஸதாமதா

ஸ்ரீமத் ஔஷத லலிதா மஹாதிரிபுரசுந்தரி ராஜதர்பார் மந்திரிணீ ஸ்ரீஇராஜமாதங்கி தேவிக்கு நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்கு ஸ்ரீவித்யா அபிவிருத்தி சங்கல்ப சஹஸ்ரநாமார்ச்சனை. படிக்கும் குழந்தைகள் பங்குகொண்டு ஸ்ரீபாலா ஸ்ரீஇராஜமாதங்கி அருள் பெறுக!

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top