சாம்பிராணி போடும்போது அதில் என்னென்ன சேர்த்து தூபமிட்டால் என்னென்ன நன்மைகள் உண்டாகும்

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து தூபம் பற்றிய பதிவுகள் :

நம் முன்னோர்கள் எதைச் செய்தாலும் அதில் ஒரு முக்கிய காரணம் இருக்கும் என்பதை நாம் தற்போது உணர்ந்து வருகின்றோம். அதன் அடிப்படையில் சாம்பிராணி போடுவது என்பது வீட்டில் வெறும் வாசனைக்காக மட்டுமல்ல. அதன் பின்னர் பல நன்மைகள் அடங்கியுள்ளது.

இருப்பினும் குழந்தைகளும், பெண்களும் தலைக்கு குளித்த பின்னர் அவர்களுக்கு சாம்பிராணி போடுவதும், கோயில், மற்றும் வீட்டில் வழிபாட்டின்போது சாம்பிராணி புகை போடுவதை இன்றும் நாம் கடைப்பிடித்து வருகின்றோம்.

சாம்பிராணி என்பது வெறும் நறுமண புகை கிடையாது. இதனை வீட்டில் போடுவதால் ஒரு ஹோமம் செய்ததற்குரிய பலன் கிடைக்கும். வீட்டில் சாம்பிராணி போடுவதால் வீட்டில் உள்ள கெட்ட சக்திகளின் ஆதிக்கம் குறைந்து தெய்வ கடாட்சம் நிறைந்து காணப்படும். 

சாம்பிராணி தினமும் போட முடியவில்லை என்றாலும் வாரத்தில் இரண்டு முறை அதாவது செவ்வாய், வெள்ளி போன்ற மங்கள நாட்களில் சாம்பிராணி போடுவதன் மூலம் மகாலட்சுமி நம் வீட்டில் நிரந்தரமாக வாசம் செய்வாள்.

சரி சாம்பிராணி போடும்போது அதில் எதை எல்லாம் சேர்த்து தூபமிட்டால் என்னென்ன நன்மைகள் உண்டாகும் என்பதைப்பற்றி நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து விரிவாக தெரிந்துகொள்ளலாம்.

சாம்பிராணியில் அகில் போட்டு தூபமிட குழந்தைபேறு உண்டாகும்.

வேப்பிலையை சாம்பிராணியில் போட்டு தூபமிட்டால் பல நோய்களிலிருந்து நிவாரணம் பெறலாம்.

சாம்பிராணியில் தூதுவளையை போட்டு தூபமிட வீட்டில் தெய்வ அருள் நிலைத்திருக்கும்.

சாம்பிராணியில் சந்தனத்தை போட்டு தூபம் போட லட்சுமி கடாட்சம் கிடைக்கும்.

சாம்பிராணியில் தூபம் போட்டால் கண் திருஷ்டி, பொறாமை ஆகியவை நீங்கி முன்னேற்றம் கிடைக்கும்.

சாம்பிராணியில் அருகம்புல் பொடியை போட்டு தூபமிட சகல தோஷங்களும் நிவர்த்தி ஆகும்.

சாம்பிராணியில் வெட்டிவேரை போட்டு தூபமிட காரியசித்தி உண்டாகும்.

சாம்பிராணியில் வெண்கடுகை போட்டு தூபமிட பகைமை விலகும்.

ஜவ்வாது போட்டு சாம்பிராணி தூபமிட்டால் திடீர் அதிர்ஷ்டம் ஏற்படும்.

வேப்பம்பட்டையை சாம்பிராணியில் போட்டு தூபமிடுவதால் பில்லி, சூனியம், ஏவல் உள்ளிட்ட துஷ்ட சக்திகள் விலகும்.

துரோகிகள் நீங்க வேண்டுமெனில் சாம்பிராணியுடன் நாய் கடுகை சேர்த்து தூபமிடுவதால் நன்மை ஏற்படும்.

செயல்களில் வெற்றி உண்டாகவும், திருமணத்தடை நீங்க சாம்பிராணியில் காய்ந்த துளசியை போட்டு தூபமிடுவது சிறந்தது.

கரிசலாங்கண்ணி பொடியை சாம்பிராணியில் தூவி தூபமிட்டால் மகான்களின் ஆசீர்வாதம் கிடைக்கும்.

நன்னாரி வேர் பொடியை சாம்பிராணியுடன் சேர்த்து தூபமிட்டால் சகல ஐஸ்வர்யங்கள் உண்டாகும்.

சாம்பிராணியுடன் மருதாணி இலைப் பொடியை சேர்த்து தூபமிடும்போது மகாலட்சுமியின் அருள் கிடைக்கும்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top