வசந்தகால ஸ்ரீலலிதா நவராத்திரி எட்டாம் நாள் தரிசனம்

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து வசந்தகால ஸ்ரீலலிதா நவராத்திரி பற்றிய சிறப்பு பதிவுகள் :

அம்பிகையும் அஷ்டமியும்

அஷ்டமீ புண்ணிய திதியே ஶ்ரீலலிதாம்பிகைக்கு என்றுமே ப்ரியமான சகஸ்ரநாம பூஜை

ஶ்ரீ வசந்த நவராத்திரி உற்சவம் - எட்டாம் திருநாள் 

"அஷ்டமீ சந்த்ர விப்ராஜ தளிகஸ்தல சோபிதா " என்கிறது ஶ்ரீ லலிதா சகஸ்ரநாமம் .

அம்பிகையின் திருமுகம் முழுநிலவு போன்றது மஞ்சள் சந்தனம் கமழும் அவளது நெற்றியோ அஷ்டமி சந்திரனை போன்று அகன்றது.. 

ஶ்ரீ மகா திரிபுரசுந்தரிக்கு பௌர்ணமி திருநாள் , சுக்ரவாரம் , அஷ்டமி திதிகளும் , நவராத்திரியுடன் கூடிய வெள்ளிக்கிழமை ஆகியன மிகவும் விசேஷமானவை ஆகும்..

ஶ்ரீ தேவி சகஸ்ரநாமம் பலஸ்ருதியில் அஷ்டமியன்று அம்பிகைக்கு பூஜை செய்து ஶ்ரீ லலிதா சகஸ்ரநாமம் பாடி அர்ச்சனை செய்தல் தேவிக்கு மிகவும் ப்ரீத்தியானது என்று கூறுகிறது.. 

அத்தகைய 1000 நாமங்களை சொல்ல முடியாதவர்கள் , 

" கங்கா பவானி காயத்ரி காளி லட்சுமி சரஸ்வதி இராஜராஜேஸ்வரி பாலா சியாமளா லலிதாம்பிகா " என்னும் உயர்ந்த பத்து திருநாமங்களை கூறி துதிக்கலாம் ..

அஷ்டமி திதியின் மகத்துவத்தை சொல்லி மாளாது ....

சிரவண மாத சாரதா நவராத்திரி சுக்லபட்சத்தில் ஶ்ரீ துர்க்காஷ்டமி சண்டிகா பரமேஸ்வரி அவதாரம் ..

ஆவணி மாதம் கிருஷ்ணபட்சத்தில் அஷ்டமி திதியில் ஶ்ரீ கோகுலநந்தன் ஶ்ரீ கண்ணன் ஜனனம் ..

மார்கழி மாதம் சுக்ல பட்சத்தில் அஷ்டமி சப்பரம் ஏறிவந்து அன்னபூரணி தேவியாக அருள்பாலிக்கும் ஶ்ரீ மதுரை மீனாட்சி தேவி ..

மாசி மாத அஷ்டமி ஶ்ரீ திருமீயச்சூர் ஶ்ரீ லலிதாம்பிகா அன்னப்பாவாடை நெய்க்குள தரிசனம்

கார்த்திகை மாத அஷ்டமி ஶ்ரீ பைரவ மகாருத்ர பூஜை

வளர்பிறை அஷ்டமி திதி கூடிய வெள்ளிக்கிழமை ஶ்ரீ அஷ்டலட்சுமி பூஜைக்கு மிகவும் உத்தமமான திருநாள் .. கிடைத்தற்கரியது ..

சனியும் புதனும் நண்பர்கள் என்றும் புதன் கிழமை வரும் அஷ்டமி அன்று செய்யும் காரியங்கள் அனைத்தும் மேன்மை தரும் என்று சொல்கிறது. வியாழன் அன்று வரும் அஷ்டமி வளரும் பலனை (அட்சயம்) தரும் தன்மை உடையது என்றும், வெள்ளியன்று வரும் அஷ்டமி குபேர தன்மைகளைத் தரும் என்றும் ஜோதிட நூல்கள் சொல்கிறது.

இந்த அம்பிகையின் புண்ணியகரமான ஆயிரம் நாமங்கள் ரகசியமானவையாகவும் தேவிக்கு மிகவும் பிரியமானவையாகவும் இருப்பதுடன், நோய்களைப் போக்குவதாகவும், நீண்ட ஆயுளைத் தருவதாகவும், மழலைச் செல்வம் இல்லாதவர் களுக்குக் குழந்தை பாக்கியம் அருள்வதாகவும் திகழ்கின்றன. ஏதேனும் ஒரு நாமாவைப் பக்தியுடனும் நம்பிக்கையுடனும் துதிப்பவர்களுக்குப் பாவங்கள் நீங்கும், கங்கை முதலிய புண்ணிய நதிகளில் நீராடிய புண்ணியம் வாய்க்கும், புனித க்ஷேத்திரத்தில் கோடி லிங்கங்களைப் பிரதிஷ்டை செய்த பலன் கிடைக்கும் என்றும் விவரித்துள்ளார் ஸ்ரீஹயக்ரீவர்.

ஓம் ஶ்ரீ மாத்ரே நம .

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top