விரதங்களின் முக்கியத்துவம்

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து விரதங்களின் முக்கியத்துவம் பற்றிய பதிவுகள் :

இறைவழிபாடு ,மந்திர ஜெபம் ,தியானம் இவற்றின் மூலம் நமக்கு இறையருள் கண்ணால் பார்க்கமுடியாத சக்தி அலைகளாக நம்மை வந்து அடைகிறது. அந்த சக்தி அலைகள் நமது பிராண மற்றும் மன அடுக்குகளில் வந்து தங்குகிறது உடலில் மிகச்சிறிய அளவே சேர்கிறது. எனவே அவற்றை சுத்தமானதாகவும் சக்திவாய்ந்ததாகவும் வைத்துக்கொள்ள வேண்டும்.

வள்ளலார் முதலிய சித்தர் ஞானியர் யாவரும் சிறு தெய்வ வழிபாட்டைத் தவிர்க்க வலியுறுத்துகின்றனர். சிறு தெய்வங்களை வழிபட்டால் சித்த சுத்தி எனப்படும் மனத்தூய்மை ஏற்படாது.

மூலாதார முதலான ஏழு சக்கரங்களில் நமது சக்தி எங்கு தற்சமயம் உள்ளதோ அதற்கேற்ப நமது எண்ண ஓட்டமும்,செயல்பாடுகளும் இருக்கும்.

அன்னமய கோசம் என்ற நமது சரீரத்தில் உணவு, நீர் அதிகம் தங்கியிருந்தால் அன்னமயகோசமே வலுவான இயக்கத்தில் இருக்கும். உணவு தண்ணீர் இவை உடலுக்குள் சென்றாலே செரிமானம் துவங்கி சரீரத்தில் கழிவுகள் உருவாகத் தொடங்கி விடும். கழிவுகளை நமக்குள் அடக்கியவாறே ஜபம், தியானம் , பூஜை, ஆலயவழிபாடு செய்து வருகிறோம். சாத்வீக தெய்வங்களாகிய சிவன், விஷ்ணு, புவனேஸ்வரி மற்றும் ஏனைய பெருந்தெய்வங்களை வழிபட்டு அவர்களின் சக்தி நமக்குள் வர வேண்டும் என்றால் நமது ஸ்தூல சரீரத்தில் உணவு, தண்ணீர், கழிவுகள் இல்லாமல் தூய்மையாக இருந்தால் நல்லது. இதை முன்னிட்டே நமது முன்னோர்கள் வெறும் வயிற்றில் இருந்து ஆன்மீகப்பயிற்சிகளைச் செய்ய வலியுருத்தியிருக்கிறார்கள்.

இறைவழிபாட்டிற்கு மாத்திரமல்ல தியானம், யோகம் இவற்றிற்கும் இது பொருந்தும். ஏனென்றால் தியான மற்றும் யோகம் இவை பிராணன் மற்றும் மனதின் உதவியால் செய்யப்படுவதால் விரதம் அல்லது வெறும் வயிற்றில் பயிற்சி செய்தால் அதனால் கிடைக்கும் சக்தி அலைகள் முழுமையாய்ப் பிராண மற்றும் மன அடுக்குகளில் தங்கி நமது ஆன்ம உயர்வுக்கு உதவும்.


Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top