ஒவ்வொரு ராசிக்கும் உரிய சிவஸ்தலங்கள்

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து ஒவ்வொரு ராசிக்கும் உரிய சிவஸ்தலங்கள் பற்றிய பதிவுகள் :

மேஷம்:- 

மலை மேல் அமர்ந்த சிவனை வழிபடு வது நல்லது. குறிப்பாக திருவண்ணாமலை சென்று வழிபடலாம். அருகில் இருக்கும் சிவாலயத்துக்குச் சென்றும் பூஜைப் பொருட்களுடன் வெல்லம் கலந்த நீரை வைத்து வணங்கலாம்.

ரிஷபம்:- 

திருவானைக்காவல், கங்கைகொண்ட சோழபுரம், திருவாரூர் ஆகிய ஊர்களிலுள்ள சிவாலயங்களுக்குச் சென்று வழிபடலாம். அருகில் இருக்கும் சிவாலயத்துக்குச் சென் றும் பூஜைப்பொருட்களுடன் தயிர் கலந்த நீரை வைத்துப் படைத்து பஞ்சாட்சர மந்திரத்தைச் சொல்லி வணங்கலாம்.

மிதுனம்:- 

திருச்செங்கோடு, சிதம்பரம், காளஹஸ்தி ஆகிய இடங்களுக்குச் சென்று வர லாம். சிவாலயத்துக்குச் சென்றும் பூஜைப் பொருட்களுடன் கரும்புச்சாறு வைத்துப் படைத்து பஞ்சாட்சர மந்திரத்தைச் சொல்லி வணங்கலாம்.

கடகம்:- 

திருக்கடையூர், திருவானைக்காவல், வேலு}ர் ஜலகண்டேஸ்வரர் கோயிலுக்குச சென்று வழிபடலாம். அருகிலுள்ள சிவாலயத்துக்குச் சென்றும் பூஜைப்பொருட்களுடன் சர்க்கரைக் கலந்த பால் வைத்துப் படைத்து வணங்கலாம்.

சிம்மம்:- 

சிதம்பரம், திருவண் ணாமலை சென்று வழிபட லாம். அருகிலுள்ள சிவால யத்துக்குச் சென்றும் சிவப் புச் சந்தனம் கலந்த பாலால் அபிஷேகம் செய்து பஞ்சாட்சர மந்திரத்தைச் சொல்லி வணங்கலாம்.

கன்னி:- 

காஞ்சி ஏகாம்பரேஸ்வரர், மதுரை மீனாட்சி சொக்கநாதரை வழிபடலாம்.

துலாம்:- 

சிதம்பரம், காளஹஸ்தி, மதுரை மீனாட்சி சொக்கநாதர் கோயில் சென்று தரிசிப்பது மிகுந்த பலனைத் தரும். அருகிலுள்ள சிவாலயத்துக்குச் சென்றும் பாலாபிஷேகம் செய்து வணங்கலாம். செல்வச்செழிப்பு மிகும்.

விருச்சிகம்:- 

திருவானைக்காவல், வேலு}ர் ஜலகண்டேஸ் வரர் கோயிலுக்குச் சென்று வழிபடலாம்.

தனுசு:- 

திருப்பரங்குன்றம், திருவண்ணாமலை சென்று வழிபடுவது நல்லது.

மகரம்:- 

காஞ்சி ஏகாம்பரேஸ்வரர் கோயிலுக்குச் சென்று வழிபட்டால் சிறப்பான பலன்களை அடையலாம்.

கும்பம்:- 

சிதம்பரம், காளஹஸ்தி ஆகிய சிவதலங் களுக்குச் சென்று வழிபட்டால், உற்சாகம் தரும் செய்திகள் உங்களை வந்தடையும்.

மீனம்:-

வேதாரண்யம், ஜலகண்டேஸ்வரர் கோயில், திருவானைக்காவல் சென்று வழிபட்டால் சிறப்பான பலனைப் பெறலாம். உங்களுக்கு அருகில் உள்ள சிவாலயத்துக்குச் சென்றும் பாலில் குங்குமப்பூ கலந்து அபிஷேகம் செய்து வணங்கலாம். செல்வச்செழிப்பு மிகும்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top