சித்ரா பௌர்ணமி பற்றிய சிறப்பு பதிவுகள்

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து சித்ரா பௌர்ணமி பற்றிய சிறப்பு பதிவுகள் :

சித்ரா பௌர்ணமி தினத்தன்று சித்ர குப்தனுக்காக பெண்கள் நோன்பு இருக்கிறார்கள். அன்று உப்பு இல்லாமல் உணவு கொள்வது மிகவும் முக்கியமானதாகும். சித்ரகுப்தன் யமதர்மராஜன் முன்னிலை யில், பூத உடலைத் துறந்து வரும் உயிர் களின் பாவ- புண்ணியங்களைத் தன்னு டைய ஏட்டிலிருந்து படிக்கிறார் என்றும்; அந்த தீவினை- நல்வினைகளுக்கு ஏற்ப நரக- சொர்க்காதிகளை ஜீவர்கள் அடைகிறார்கள் என்பதும் ஒரு நம்பிக்கையாகும்.

சிவபெருமான் ஜீவராசிகள் செய்யும் காரியங்களைக் கணக்கு எழுதுகிறார் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. அகில உலகிற்கும் மூல காரணமாகிய சிவபெருமான் ஏடும் எழுத்தாணி யும் கொண்டு தாமே கணக்கு எழுதுவது இல்லை. அதற்காக ஒரு தேவதையைப் படைக்க எண்ணினார். ஒருமுறை அவர் சக்திதேவியைப் பார்க்க, அதன் குறிப்பறிந்து பராசக்தி ஒரு சித்திரம் வரைந்தார். அதற்கு இருவரும் உயிரூட்ட, அதிலிருந்து தோன்றியவரே சித்ரபுத்ரன்.

இவர் மறுபடியும் காமதேனுவின் மகனாக சித்திரை மாதம், சித்திரை நட்சத்திரம், பௌர்ணமி தினத்தன்று பிறந்தார். சித்ரபுத்ரன் என்று பெயர் வைக்கப்பட்டு தேவேந்திரனாலும் அவர் மனைவி இந்திராணியாலும் வளர்க்கப் பட்டார். சிவபெருமானை வழிபட்டு அவர் அருள் பெற்றார். சிவபெருமான் இவருக்கு ஞான திருஷ்டியை அளித்து, ஜீவராசிகளின் செயல்கள் பற்றிய கணக்குகள் எழுதும் பணியை ஒப்படைத் தார். சித்ரபுத்ரனாக இருந்தாலும், சித்ரகுப்தன் என்ற பெயரே பிரசித்தமாக எல்லாராலும் சொல்லப்படுகிறது.

சித்ரபுத்ரனுக்கு சித்ரகுப்தன் என்று பெயர் வருவதற்குரிய காரணத்தை கிருபானந்த வாரியார் தனது சொற்பொழிவில் ஒரு உதாரணம் மூலமாக விளக்கியுள்ளார்:

""கோவில் கும்பாபிஷேகத்திற்காக நன்கொடை வசூல் செய்ய கோவில் நிர்வாகி ஒரு வீட்டிற்குச் சென்றார். அந்த வீட்டுக்காரர் அவரை இன்முகத் துடன் வரவேற்று, இந்த நல்ல காரியத்திற்கு தன் குடும்பச் சூழ்நிலை காரணமாக அதிகமாக பொருளுதவி செய்ய முடியாமல் இருப்பதை விளக்கி, தன்னால் முடிந்த ஐம்பது ரூபாயைத் தந்து, கும்பாபிஷேகத்திற்குத் தன்னால் முடிந்த சரீர உதவியை அளிப்பதாக ஆத்மார்த்தமாகச் சொன்னார்.

அதே கோவில் நிர்வாகி இரண்டாவதாக ஒரு வீட்டிற்குச் சென்று, அந்த வீட்டுக்காரரின் மனைவியிடம் தான் வந்த காரியத்தைச் சொல்லி, அவரால் முடிந்த நன்கொடையை அளிக்கும்படி கேட்டார். அந்தப் பெண்மணி உள்ளே சென்று தன் கணவரிடம் அதைச் சொல்ல, அந்த வீட்டுக் காரர், "இந்த தண்ட செலவுகளுக்கெல்லாம் நம்மி டம் பணம் எங்குள்ளது?' என்று கூறி, அவரை வாசலிலேயே ஏதாவது சாக்கு சொல்லி அனுப் பாதது பற்றி தன் மனைவியைக் கடிந்து கொண்டார். இதை வெளியில் காட்டிக் கொள்ளாமல் அந்த அம்மையார் கோவில் நிர்வாகியிடம் நூறு ரூபாயைக் கொடுத்தார்.

சித்ரகுப்தன் இந்த இருவருடைய செயல் களுக்கு பாவ- புண்ணிய பலன்களைத் தனது ஞான திருஷ்டியால் எழுதினார். நல்ல காரியத் திற்கு நல்ல மனதுடன் பணம் கொடுத்த முதல் வீட்டுக்காரருக்கு- பணம் குறைவாகக் கொடுத்த போதிலும் அதிக புண்ணியத்தின் பலன்களை எழுதினார். ஆனால் நூறு ரூபாய் கொடுத்தாலும் இரண்டாவது வீட்டுக்காரரின் குணத்தை கருத் தில் கொண்டு பாவக் கணக்கிலேயே சேர்த்தார்.

சித்ரம் என்பதற்கு "ஆச்சரியமானது' என்றும் ஒரு பொருள் உண்டு. குப்தன் என்றால் "ரகசியம்' என்று பொருள். அவர் கணக்குகள் எழுதும் விதம் ஆச்சரியமாக இருக்கும். மேலும் எப்படிப்பட்ட ரகசியத்தையும் கண்டறிந்து கணக்கெழுதிவிடுவார். எனவேதான் இவர் சித்ரகுப்தன் எனப்பட்டார்.''

சித்ரகுப்ரன் பசுவின் கர்ப்பத்தி லிருந்து பிறந்ததால் சித்ரா பௌர்ணமி விரதம் இருக்கும் நாளில் பசும்பால், பசுந்தயிர், பசு நெய் ஆகியவற்றைக் கண்டிப்பாகப் பயன்படுத்தக்கூடாது. அவசிய மானால் எருமைப்பால், எருமைத்தயிர் சேர்த்துக் கொள்ளலாம். அன்று உணவில் உப்பு சேர்க்கக்கூடாது.

கிராமங்களில் சித்ரா பௌர்ணமி அன்று எண்ணெய் தேய்த்துக் குளிப்பார்கள்.

அவ்வாறு குளிக்காத பட்சத்தில் சித்ர குப்தன் செக்கில் போட்டு ஆட்டிவிடுவார் என்று குழந்தைகளை பயமுறுத்தி குளிக்க வைப்பதுண்டு. தீபாவளிக்கு அடுத்து, சித்ரா பௌர்ணமி அன்று எண்ணெய் தேய்த்துக் குளிப்பது உடலுக்கு நல்லது.

சித்ரகுப்தருக்கு தமிழகத்தில் இரண்டு இடங்க ளில் கோவில்கள் உள்ளன. காஞ்சிபுரத்தில் தனிக் கோவில் அமைக்கப்பட்டுள்ளது. இதேபோல தேனி மாவட்டம், போடி அருகில் ஒரு கோவில் உள்ளது.

சித்ரகுப்தனின் மனைவி பிரபாவதி என்று அழைக்கப்படுகிறாள். நவகிரகங்களில் ஒன்றான கேதுவுக்கு சித்ரகுப்தன்தான் அதிபதி. கேது தசை மற்றும் கேது புக்தியின் துன்பத்தை அனுபவிப் பவர்கள் சித்ரகுப்தனை வழிபட வேண்டும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top