யுகாதி பண்டிகை

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து யுகாதி பண்டிகை பற்றிய சிறப்பு பதிவுகள் :

யுகாதி என்றால் யுகத்தின் ஆதி ஆரம்பம் என்று பொருள். யுகாதி பண்டிகை அன்றுதான் பிரம்மா உலகத்தைப் படைத்ததாகக் கூறுவார்கள். 

யுகாதி தினம் புதிய வேலை, கல்வி, தொழில் 
போன்றவற்றைத் துவக்குவது சிறந்தது.

வசந்தகாலத்தின்பிறப்பாகவும் கொண்டாடப்படுகிறது.
யுகாதி அன்று ஆறு சுவைகள் கொண்ட உணவாக யுகாதி பச்சடி செய்வார்கள்.

வா‌ழ்‌க்கை‌யி‌ன் த‌த்துவ‌த்தை உண‌ர்‌த்து‌ம் ‌விதமாக யுகா‌தி ப‌ச்சடி - வாழ்க்கை என்பது மகிழ்ச்சி, கவலை, கோபம், அச்சம், சலிப்பு, ஆச்சர்யம் கலந்தது என்பதை உணர்த்தும் வகையில், கசப்புக்கு வேப்பம்பூ, துவர்ப்புக்கு மாங்காய், புளிப்புக்கு புளி பானகம், உரைப்புக்கு மிளகாய் அல்லது மிளகு, இனிப்புக்கு வெல்லம் ஆகிய 6 சுவை கொண்ட பச்சடி செய்து சுவாமிக்கு படைத்து அனைவருக்கும் உணவில் பரிமாறுவா‌ர்க‌ள். 

யுகாதி பச்சடி தயாரித்து இறைவனுக்கு படையல் இட்டு சூரியனை வழிபடுவா‌ர்க‌ள். 
மாலையில் வாசலில் விளக்கேற்றி , கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்வது வழக்கம் ..
வேப்பம்பூ, மாங்காய், புளி, வெல்லம் மற்றும் உப்பு ஆகியவற்றை சேர்த்து செய்யப்படுகிறது.

இந்த புத்தாண்டு மகிழ்ச்சி, துக்கம் எல்லாவற்றையும் கொண்டுதான் இருக்கும். மகிழ்ச்சி மட்டுமே வாழ்க்கையில் நிரந்தரம் அல்ல. துக்கமும் சேர்ந்ததுதான் வாழ்க்கை என்று உணர்த்தும் வகையில் யுகாதி பச்சடி அமையும்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தெலுங்கு வருடப்பிறப்பான யுகாதி பண்டிகை விழா சிறப்பாக கொண்டாட்டத்தில் 40 நாள் நடக்கும் நித்ய உற்சவம் தொடங்கும் ...
மாடவீதியில் தங்க பல்லக்கில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் மலையப்ப சாமி எழுந்தருளி சகஸ்ர தீப அலங்கார சேவை நடைபெறுவது வழ்க்கம் ...

வாழ்க்கை என்பது கசப்பும் இனிமையும் கலந்து (சுக துக்கத்துடன்) இருக்க வேண்டும் என்பதற்காகவே கோவிலுக்கு சென்று வழிபட்டு வேப்பிலை, சர்க்கரை கலந்த பிரசாதம் வழங்கப்படுகிறது. 

யுகாதி விருந்தில் பண்டிகையின் முக்கிய இனிப்பு பண்டமான "பூரண் போளி" இடம்பெறுவது சிறப்பம்சமாகும். 

புத்தாண்டு தினத்தை ஒட்டி வீட்டு பெரியவர்களை காலில் விழுந்து நமஸ்கரித்து அவர்களுடைய ஆசிர்வாதத்தை பெறுவது சிறப்பு ...

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top