வசந்தகால ஸ்ரீலலிதா நவராத்திரி மூன்றாம் நாள் சிறப்பு

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து வசந்தகால ஸ்ரீலலிதா நவராத்திரி பற்றிய சிறப்பு பதிவுகள் :

மூன்றாம் நாள் தரிசனம் :

ஸ்ரீ சக்ரமஹாராணி ஸ்ரீ மத் ஔஷத லலிதா திரிபுரசுந்தரி.திதிநித்யாதேவிகள். தசமகா வித்யா 

காமேஸ்வரி-காமேஸ்வரர் -மாயையின் மூன்று குணங்களில் சுத்த சத்வ குணத்தில் பிரம்மத்தின் சம்பந்தமாக இருப்பது வித்தை எனப்படும். ஸ்ரீவித்யை என்றால் பரம மங்களம். அது மோக்ஷத்தை அருளவல்ல பிரும்ம வித்யா ஸ்வரூபினியான சித் சக்தியாகும். மின்னல் கொடிபோல் பிரகாசித்து விளங்கும் அந்த சித் சக்தியே சிந்தையும், மொழியும் செல்லாத நிலைமையான ஸ்ரீவித்தையாகும். பரப்பிரும்ம ஸ்வரூபத்திற்கு அபிமானதாய், சுத்தமான சைதன்ய வடிவினதாய் உள்ள சக்தியே சித் சக்தி.

ஸ்வரூபம்தான் பிரபஞ்ச ஆதாரம். மாயையின் முக்குணங்களில் பிரதிபலித்து வடிவமாகத் தோன்றுவது சித்சக்தியே. சக்தியின் கருணையால் பிறப்பது அருள். சிவமே அன்பு. அன்பு இன்றி அருள் சுரக்காது. அருள் இன்றி அன்பு பயன்படாது. அருளினால் இம்மை, மறுமை இருபயனும் விளையும், நிர்க்குண உபாசனையால்- போதனையால் மறுமைப் பயன் வேண்டுவோர் இகசுகம் வேண்டார். தாய் தன் சேய்க்கு வேண்டியதைக் கருணை மூலமாக அளிப்பாள். ஆகவே சித் சக்தியே ஸ்ரீவித்தை. வித்யை என்றால் அவித்யை ஒழிக்கும் சாமர்த்திய சக்தி உடையது.

சக்தி உபாசனையை ஸ்ரீவித்யை என்றும் சகுணம் என்றும் சொல்வர். இதனால் இகத்திலும் பரத்திலும் பயன்கள் உண்டு. சிவ உபாசனையை பிரும்ம வித்தை என்றும் நிர்க்குணம் என்றும் சொல்வர். இதனால் ஜீவன் முக்தனாய் மறுபிறவியற்று சச்சிதானந்தாமாய் விளங்கலாம். அன்பே சிவம் என்று சொல்வர். சிவத்தை எளிதில் அறிய முடியாது. ஆனால் அன்பை நம்மால் அறிய முடியும். ஆகவே அன்பினால் சிவத்தை அடைய முடியும். அந்த அன்பே சித்சக்தி. சித்சக்தியாகிய தாயின் கருணை நமக்கு ஏற்படாவிட்டால் நம்மால் இந்தப் பிறவிப் பெருங்கடலை கடக்க முடியாது. எல்லா வித்தைகளுக்கும் லட்சியமாய், ஆண் பெண் அலி என்ற லிங்க வேறுபாடு இல்லாததாயும் பிறவிப் பெருங்கடலில் துன்பத்தில் உழல்பவர்களுக்கு தாரகம்- படகு போன்று காப்பாற்றுவதால் அப்பரம் பொருள் சக்தி-பராசக்தி எனப்படும். அவள் ஒருவளே பிரும்ம ரூபத்தில் சிருஷ்டிப்பவளாகவும், விஷ்ணு ரூபத்தில் உலகை காப்பவளாகவும், ருத்ர ரூபத்தில் சம்ஹரிப்பவளாகவும் இருக்கின்றாள்.

வித்தில்லாமல் பயிர் இல்லை. வித்தாய் விளங்கும் சிவத்தினுள் சக்தி அடங்கியுள்ளது. விதை முளைத்தெழும்போது சக்தி சிவத்தை வளர்க்கும். இறுதியில் வளர்ந்த சக்தி அடங்கும் இடம் சிவன் என்ற வித்தே என்பதே தத்துவம்.

பிரும்மா, விஷ்ணு, ருத்திரன் என்ற திருமூர்த்திகளுக்குமேல் ஈஸ்வர ஸ்வரூபமாகிய மகேசுவரன் சதாசிவன், அவர்களுக்குமேல் காமேசுவர் காமேஸ்வரியாக சிவசக்தி ஐக்ய நிலை. ஈஸ்வரனிடத்தில் முதலில் தோன்றியது சக்தி தத்துவம். பின் திரிமூர்த்தி மற்றும் மூன்று சக்திகள் தத்துவம். அதிலிருந்தே சதாசிவ தத்துவம் தோன்றுகிறது.
லலிதாபரமேஸ்வரி - ஈஸ்வரன், திரிபுரசுந்தரி - திரிபுராந்தகர், இராஜராஜேஸ்வரி - இராஜராஜேஸ்வரர். . எல்லாம் காமேசுவர் - காமேஸ்வரியே!

தேவியின் அங்க தேவதை - பாலா, உபாங்கதேவதை - அன்னபுரணா, பாசத்திலிருந்து தோன்றிய ப்ரித்தியங்க தேவதை - அச்வாரூபா, இடது - இலட்சுமி, வலது - சரஸ்வதி, அருகில் புத்தியிலிருந்து தோன்றிய ராஜமாதங்கி - சியாமளாதேவி - மந்திரிணீ, அஹங்காரத்தினின்று தோன்றிய வராஹி - தண்டினீ, சண்டி, வைஷ்ணவி,

யோகினிகள் - ஒவ்வொரு திதிக்கும் உரியவள் அம்பிகையின் அம்சமான ஒரு தேவி. இத்தேவிகள் மகாநித்யையுடன் 16 பேர். 1.காமேஸ்வரி, 2.பசுமாலினி, 3.நித்யக்லின்னா, 4.பேருண்டா, 5.வந்ஹிவாஸினி, 6.மஹாவஜ்ரேஸ்வரி, 7.சிவதூதீ, 8.த்வரிதா, 9.குலஸூந்தரி, 10.நித்யா, 11.நீலபதாகா, 12.விஜயா, 13.ஸர்வமங்களா, 14.ஜ்வாலாமாலினி, 15. சித்ரா இந்த பதினைந்து நித்யா தேவிகளுக்கு அதிஷ்டானமாய் விளங்கும் மஹாநித்யாதேவி - நித்யாகாமேச்வரி.

 இந்தச் சக்திகளுக்கு பொதுவாக யோகினிகள் எனப்பெயர். அம்பிகையின் அங்கதேவதை களான இவர்கள் ஸ்ரீ சக்கரத்தின் நடுவிலுள்ள முக்கோணத்தைச் சுற்றி இருப்பார்கள். அமாவாசையிலிருந்து பௌர்ணமி வரை பௌர்ணமியிலிருந்து அமாவாசை வரை ஒவ்வொரு தினத்திற்கும் ஒரு திதி என்று தனது அங்கமான பதினைந்து நித்யாக்களைப் பூஜிப்பதால் தேவி பரம சந்தோஷமடைகின்றாள். இது திதி நித்யா பூஜை எனப்படும். இதில் சுக்லபக்ஷம், கிருக்ஷ்ண பக்ஷம் என்ற இரு பக்ஷங்களிலும் நடுநாயகமாக வீற்றிருப்பவள் த்வரிதா என்கிற நித்யாதேவி. 

இவளுடைய திதி தினம் அஷ்டமி. இருவிதச் சக்திகளுடன் பேரின்பத்திற்கு அழைத்துச் செல்பவளும் இவளே சிற்றின்பத்தில் ஆழ்த்துபவளும் இவளே. அதனால் இவள் திதியில் தேவ காரியங்கள் மட்டுமே செய்யப்படும்.

பிரதிபத (எ) பிரதமை திதி –காமேஸ்வரி— நெய் நிவேதித்து பூஜை -பிணி நீக்கம்,
துவிதை திதி –பசுமாலினி- சர்க்கரை நிவேதித்து பூஜை –ஆயுள் பெருக்கம்,
த்ரிதியை திதி –நித்யக்லின்னா- பால் நிவேதித்து பூஜை –சகல துக்க நீக்கம்
சதுர்த்தி திதி –பேருண்டா- பக்ஷணம் நிவேதித்து பூஜை –விக்ன நிவர்த்தி
பஞ்சமி திதி –வந்ஹிவாஸினி- வாழைப்பழம் நிவேதித்து பூஜை –புத்தி சூட்சுமம்
சஷ்டி திதி –மஹாவஜ்ரேஸ்வரி- தேன் நிவேதித்து பூஜை –உடல் ஒளி
சப்தமி திதி -சிவதூதீ- வெல்லம் நிவேதித்து பூஜை –சேக நிவர்த்தி
அஷ்டமி திதி -த்வரிதா- தேங்காய் நிவேதித்து பூஜை – தாப நிவர்த்தி
நவமி திதி –குலஸூந்தரி-- நெற்பொறி -நிவேதித்து பூஜை – இவ்வுலகச் சுகம்
தசமி திதி –நித்யா- கறுப்பு எள் நிவேதித்து பூஜை - யமலோக பய நிவர்த்தி
ஏகாதசி திதி –நீலபதாகா- தயிர் நிவேதித்து பூஜை –தேவி ஆதிக்கம்
துவாதசி திதி –விஜயா- அவல் நிவேதித்து பூஜை –தேவியிடம் ஆனந்தம்
த்ரையோதசி திதி –ஸர்வமங்களா- கடலை நிவேதித்து பூஜை –சந்த்தி விருத்தி
சதுர்த்தசி திதி –ஜ்வாலாமாலினி- சத்துமா நிவேதித்து பூஜை –சிவன் அருளுக்குப் பிரியமாகும் தன்மை
பௌர்ணமி திதி/ அமாவாசை திதி சித்ரா--பாயாசம் நிவேதித்து பூஜை –பிதுர்களை கரையேற்றுதல்
இந்த பதினைந்து நித்யா தேவிகளுக்கு அதிஷ்டானமாய்- காரியத்திற்கு காரணமாய் விளங்கும் மஹாநித்யாதேவி- நித்யாகாமேச்வரி.

அந்தந்த நட்சத்திரன்று லலிதாபரமேஸ்வரி-ஈஸ்வரன், திரிபுரசுந்தரி-திரிபுராந்தகர், இராஜராஜேஸ்வரி-இராஜராஜேஸ்வரர் –க்கு பூஜைக்குரிய நிவேதனப் பொருள்.
அஸ்வினி-நெய், பரணி-எள், கார்த்திகை-சர்க்கரை, ரோகிணி-தயிர், மிருகஷீரிடம்-பால், திருவாதிரை-கிலாடம், புனர்பூசம்-தயிரேடு, பூசம்-மோதகம், ஆயில்யம்-பேணி, மகம்- கிருத மண்டகம் (நெய்த்திரட்சி, நெய்ப்பாலேடு), பூரம்-கம்சாரம் (நீர்சாரம்), உத்திரம்-வடபத்திரம், ஹஸ்தம்-கிருதபூரம் (நெய்வெல்லம்ஹல்வா), சித்திரை-வடை, சுவாதி- கோகரசகம் (தாமரை ரசகம்), விசாகம்-பூர்ணயம், அனுஷம்-மதுசூரணம் (வள்ளிக் கிழங்கு), கேட்டை-வெல்லம், மூலம்-அவல், பூராடம்-திராக்ஷை, உத்திராடம்-கர்ச்சூரி (பேரிச்சம்), திருவோணம்-ராசகம், அவிட்டம்-அப்பம், சதயம்-நவதீதம் (வெண்ணெய்), பூரட்டாதி-பயிறு, உத்திரட்டாதி-மோதகம், ரேவதி-மாதுளம் பழம்.

ஸ்ரீமேரு சக்கரம் அமைப்பு!

கீழே சதுரமான ஒரு மூன்று அடுக்கு மேடை மேலே செல்ல செல்ல குருகும்.
நான்கு முனைகளிலும் முறையே சூரியன், சந்திரன், முக்கோணம், சதுரம்..
அதன் மேலே 3 வட்ட வடிவமான மேடை மேலே போகப் போகப் குருகிக்கொண்டே செல்லும்.
அதற்கு மேலே 16 இதழ் தாமரை.
அதற்கு மேலே 8 இதழ் தாமரை.
அதற்கு மேலே 14 முக்கோணம்
அதற்கு மேலே 10 முக்கோணம்
அதன் மேலே 10 முக்கோணம்
அதன் மேலே 8 முக்கோணம்
அனைத்துக்கும் மேலே உச்சியில் ஒற்றை முக்கோணம்.
அதன் நடுவில் ஒரு வட்டம் அதில் உருண்டையான பிந்து வடிவம் (அம்பாள்).

உச்சியிலிருந்து பார்த்தால் 43 முக்கோணம் தெரியும்.
ஸ்ரீ மேருவை செம்பு, வெள்ளி, தங்கம் போன்ற உலோகங்களில் உருவாக்குவது வழக்கம்.
சாக்த வழிபாட்டிற்கு ஸ்ரீவித்யா வழிபாடு என்பர்,
ஸ்ரீசக்ரம் சர்வரோகஹர ஸ்ரீசக்ரத்தின் முக்கோணத்தில் வசினி, காமேசி, மோதினி, விமலா, அருணா, ஜயினி, சர்வேஸ்வரி, கௌளினி ஆகிய லலிதா சகஸ்கர நாமத்தை இயற்றிய எட்டு தேவதைகள் உறைவதால்-சகஸ்ரநாம அர்ச்சனைகளை இந்த ஸ்ரீ எந்திரத்திற்கு செய்ய காமாட்சி அருள்புரிந்ததால் கர்ப்பகிரஹத்தை முக்கோணவடிவில் அமைத்து மேலும் உக்கிரகமாக இருந்ததால் எட்டு திக்குகளிலும் இருந்த காளியை ஆகர்ஷித்து ஸ்தம்பனம் செய்து ஸ்ரீசக்ர சுற்றில் அடைத்ததால் அன்னை சாந்த சொரூபியாகி அருள். தேவியின் விருப்பப்படி தர்மம், அர்த்தம், காமம், மோட்சம் ஆகியவற்றின் கோடியில் உள்ள மோட்சத்திற்கு அழைத்து செல்வதாலும், கோடி விருப்பங்களை- கோடி காமங்களை நிறைவேற்ற ஸ்ரீசக்ர பதக்கம் அருளி ஈசன் அருள்.

பார்வதி தேவியின் நவ பெயர்கள்.

1.ஷைலபுத்ரி, 2.பிரம்மசாரினி, 3.சந்திரகாந்தா, 4.குஷ்மாந்தா, 5.ஸ்கண்டமாதா, 6.காத்யாயினி, 7.காளாராத்ரி, 8.மகாகௌரி, 9.சித்தாத்ரி.
பராசக்தியின் பத்து (தசமகா) வடிவங்கள்- வித்தைகள் சித்தவித்தைகள் மகாவித்தைகள் எனப்பட்டாலும் துரியமானதும் தத்துவத்திற்கு அப்பாற்பட்டதுமான தேவியின் ஆனந்த வடிவமே மஹாவித்தை எனப்படும். அந்த ஈசுவர சக்தி தேவியிடமிருந்து தோன்றியவர்களே தசமஹாவித்தை. எண் திசைகள் மற்றும் நிலம், வானம் எனப் பத்து திக்குகளில் தோன்றிய இந்த தசமஹா வித்தைகளே விஷ்ணுவின் தசாவதார காரியங்களை நிறைவேற உதவியுள்ளார்கள்.
தசமஹாவித்தைகள்!

1.தாரா!
2.கமலாத்மிகா!
3.சின்னமஸ்தா!
4.காளி!
5.லலிதா திரிபுர சுந்தரி!
6.மாதங்கி!
7.பகாளாமுகி!
8.புவனேஸ்வரி!
9.திரிபுரபைரவி!
10.தூமாவதி!

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top