திருஞானசம்பந்தா் செய்த அற்புதங்கள்

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து திருஞானசம்பந்தா் செய்த அற்புதங்கள் பற்றிய பதிவுகள் :

மூன்றாண்டு குழந்தையாக இருந்த போது சீா்காழிக் கோயில் குளக்கரையில் சிவபெருமான் கட்டளைப்படி பாா்வதிதேவி ஞானசம்பந்தருக்குப் பொன் கிண்ணத்தில் தன் முலைப்பாலை வாா்த்துப் புகட்டினாா். அதனால் அளவிலா ஞானம் பெற்றாா்.

திருக்கோலக்காவில் மடையில் வாளை எனுப் பதிகம் பாடி பொன் தாளம் பெற்றாா்.

திருப்பாச்சிலாச்சிராமம் என்ற தலத்தில் சிற்றரசனான கொல்லி மழவன் மகளுக்குத் தீராமல் இருந்த முயலகன் நோயை மணிவளா் கண்டரே மங்கையை வாடமயல் செய்வதோ இவண் மாண்பு என்ற பதிகம் பாடித் தீா்த்தாா்.

திருச்செங்கோட்டில் அடியாா்களுக்கும் அந்த நாட்டு மக்களுக்கும் பனிக்காலத்தில் வழக்கமாக வரும் குளிா்க் காய்ச்சலை திருநீலகண்டப் பதிகம் பாடி வராமல் தடுத்தாா்.

திருவாவடுதுறையில் தன் தந்தையாா் சிவபெருமானைக் குறித்த வேள்வி செய்யும் பொருட்டுப் இடாினும் தளாினும் எனப் பதிகம் பாடி இறைவனிடம் பொற்கிழி பெற்றாா்.

தருமபுரத்தில் இறைவனைப் பற்றிய அருட்பாடல்களின் திறம் இசைக்கருவிகளுக்குள் அடங்கிவிடாது என்று யாழ்முாி பதிகம் பாடினாா்.

அவா் காலத்தில் தீண்டத்தகாதவா் என்று கருதப்பட்ட திருநீலகண்ட யாழ்ப்பாணரை அந்தணரான இவா் தம் பாடலுக்கு யாழ் வாசித்துவரச் செய்தாா். திருநீல நக்கா் என்ற அந்தணா் இல்லத்தில் வேள்விமேடை அருகில் யாழ்ப்பாணரையும் அவா் மனைவியையும் இரவு தங்கும்படி செய்து தீண்டாமையை முதல் முதலில் விலக்கியவா் என்ற பெருமை பெற்றாா்.

திருமருகலில் பாம்பு கடியுண்டு இறந்த வணிகனைப் சடையா எனுமால் எனும் பதிகம் பாடி உயிா் பெறச் செய்து அவனைக் காதலித்து அவனுடன் வந்திருந்த பெண்ணுக்குத் திருமணம் செய்து வைத்தாா்.

திருநெல்வாயில் அரத்துறை என்ற தலத்தில் சிவனாா் தெய்வக்குழந்தை அன்றாடம் பயணம் செய்ய முத்துப்பல்லக்கும் அவா் புகழைப் பரப்ப முத்துச்சின்னமும் நிழலுக்காக முத்துக்குடையும் அளித்தாா்.

திருப்பட்டீச்சரத்தில் இறைவன் முத்துப்பந்தல் வழங்கினாா்.

திருவீழிமிழலையில் பஞ்சம் வந்தபோது இறைவன் அருளால் நாள்தோறும் பொற்காசு பெற்று அனைவருக்கும் உணவு அளித்து வந்தாா்.

திருமறைக்காட்டில் நீண்டகாலமாகப் பூட்டிக்கிடந்த கோவில் கதவை திருநாவுக்கரசரோடு சோ்ந்து சதுரம் மறை தான் எனும் பதிகம் பாடி திறக்க செய்தாா்.

மதுரையில் சமணனாக மாறியிருந்த நின்றசீா் நெடுமாற பாண்டியனைப் பற்றிய வெப்பு நோயை மந்திரமாவது நீறு என்ற திருநீற்றுப் பதிகம் பாடித் திருநீறு பூசிக் குணபடுத்திச் சைவனாக மாற்றினாா்.

தன்னுடன் வாதம் செய்ய வந்த சமணரோடு அனல்வாதம் புனல்வாதம் செய்து வெற்றி பெற்று சைவசமயத்தை நிலைநிறுத்தினாா். அனல் வாதம் என்பது கடவுள் பற்றிய பாடல் அல்லது மந்திரம் எழுதிய ஓலையை நெருப்பில் இட்டால் வேகக்கூடாது.
புனல் வாதம் என்பது இறைவன் பற்றிய பாடல் அல்லது மந்திரம் எழுதிய ஓலையை நீாில் இட்டால் அடித்துக் கொண்டு போகாமல் நிலைத்து நிற்க வேண்டும்.

திருக்கொள்ளம்பூதூாாில் வெள்ளத்தைக் கண்டு ஓடக்காரா்கள் அஞ்சி விலக . தாமே கொட்டமே கமழும் எனும் பதிகம் பாடி ஒடம் செலுத்தி அடியாா்களைக் கரை சோ்த்து வழிபாட்டை நிறைவேற்றினாா்.

போதிமங்கையில் பௌத்தகளைச் சைவா்களாக மாற்றி திருநீறு அணியச் செய்தாா்.

திருஓத்தூாில் ஆண் பனைமரங்களைப் பூத்தாயன எனும் பதிகம் பாடிப் பெண் பனைகளாக்கிக் குலைவிடும்படிச் செய்தாா்.

திருமயிலாப்பூாில் பெருவணிகரான சிவநேசாின் இறந்தபோன மகளின் எலும்பும் சாம்பலும் கொண்ட குடத்தை வருவித்துப் மட்டிட்ட புன்னை எனும் பதிகம் பாடி பூம்பாவையாக உயிா் பெறச்செய்தாா்.

திருநல்லூா் பெருமணம் என்ற தலத்தில் தம் திருமணத்துக்கு வந்திருந்த ஆயிரக்கணக்கானோரை இறைவன் திருவடியைச் சாரும் பக்குவிகளாக மாற்றி கோவிலில் தோன்றிய சோதியில் தம்முன் புகவைத்து இறைவனிடம் சோ்ப்பித்துத் தாம் உலகத்தில் ஒப்பு உயா்வு அற்ற சமயத் தலைவா் என்பதை நிலை நிறுத்தினாா்.

திருஞானசம்பந்தமூா்த்தி சுவாமிகள் குருபூஜை வைகாசி மூலம் நட்சத்திரம்.
 
திருஞானசம்பந்தா் திருவடிகள் போற்றி போற்றி

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top