ஒவ்வொரு மனிதரும் விரும்புவது வெற்றியைத்தான். எங்கும் எதிலும் வெற்றி பெறவேண்டும் என்பதே அனைவரின் கனவு. ஆனால், பொறாமையும் போட்டியும் நிறைந்திருக்கும் இன்றைய உலகத்தில் வெற்றி என்பது பலருக்கும் எட்டாக் கனியாகவே இருக்கிறது.
வெற்றிக் கனி, அதுவாகவே நம் மடியில் விழுவதற்கு ஓர் அற்புத உபாயத்தை ஒரு மந்திரத்தின் மூலமாக நமக்கு அருளியுள்ளார் கங்கோள மகரிஷி. எங்கும் எதிலும் நம்மை வெற்றி அடையச் செய்யும் அந்த மந்திரம் ‘உச்சிஷ்ட கணபதி மந்திரம்’.
எந்த ஒரு செயலைத் தொடங்குவதற்கு முன்பாகவும் விநாயகரை வழிபட்டே தொடங்கவேண்டும். இது, விநாயகருக்கு சிவபெருமான் கொடுத்த வரம். ஆனால், கொடுத்த வரத்தை மறந்து சிவபெருமானே கணபதியை வழிபடாமல் திரிபுர அசுரர்களை சம்ஹாரம் செய்யச் சென்ற காரணத்தால், அவருடைய தேரின் அச்சு முறிந்துபோனது. அதேபோல், முருகப்பெருமான் தாருகாசுரனை வதம் செய்யப் போன போதும், விநாயகரை வழிபட மறந்தார். எனவே, அவரால் தாருகனை வதம் செய்யமுடியவில்லை. பின்னர், விநாயகரை உச்சிஷ்ட கணபதியாக வழிபட்ட பிறகே அவர்களால் திரிபுர அசுரர்களை சம்ஹாரம் செய்யவும், தாருகனை வதம் செய்யவும் முடிந்தது.
எனவே, வாழ்க்கையில் வெற்றி பெற விரும்பும் ஒவ்வொருவருக்கும் ஏற்ற உன்னதமான மந்திரம், உச்சிஷ்ட கணபதி மந்திரம் ஆகும்.
இந்த மந்திரத்தை தகுந்த குருநாதர் மூலமாக உபதேசம் பெற்ற பிறகே ஜபிக்கவேண்டும்.குரு மூலமாக மந்திர உபதேசம் பெறலாம்.
எப்படி வழிபடுவது?
இந்த ஜபத்தை தேய்பிறை சதுர்த்தசியன்று தொடங்கி வளர்பிறை சதுர்த்தசி முடிய செய்ய வேண்டும். தினமும் ஜபம் முடித்த பிறகு, விநாயகருக்கு பாயசம் நைவேத்தியம் செய்ய வேண்டும்.
உச்சிஷ்ட கணபதி மந்திரத்தை ஜபிக்கும் காலம் உச்சிஷ்ட கணபதி மந்திரத்தை எப்போது வேண்டுமானாலும் ஜபிக்கலாம். குறிப்பாக, காலையில் படுக்கையில் இருந்து எழுந்ததும், படுக்கையில் இருந்தபடியேகூட ஜபிக்கலாம். நாம் எவ்வளவுக்கு எவ்வளவு ஜபிக்கிறோமோ, அந்த அளவுக்கு விரைவாக நமக்கு வெற்றி கிடைக்கும்.
கிடைக்கும் பலன்கள்…
தேர்தல், தேர்வுகள், போட்டிகள் போன்றவற்றில் வெற்றி பெற விரும்புகிறவர்கள், உச்சிஷ்ட கணபதி மந்திரம் ஒரு லட்சம் தடவை ஜபிக்க வேண்டும்; அப்படிச் செய்தால், எந்தக் காரியத்திலும் வெற்றியே கிடைக்கும்.
குரு உபதேசம் பெற்று மந்திரம் ஜபிக்க முடியாதவர்கள், கீழ்க் கண்ட விநாயகர் துதிப்பாடலை தினமும் 1000 முறை பக்திபூர்வமாக பாடி உச்சிஷ்ட கணபதியை வழிபட்டால், தொடங்கும் அனைத்து காரியங்களிலும் வெற்றியே கிட்டும் என்பது திண்ணம்!
உச்சிஷ்ட கணபதி விநாயக
என் விக்னமெல்லாம் நீ தீர்ப்பாய்
தும்பிக்கையால் என்னை நீ அணைக்க
என் அஞ்ஞானம் தீர்ந்து நான் எனை மறக்க
எப்போதும் அருள் செய்வாய் விநாயகா
எல்லோரும் போற்றும் விநாயகா!
உச்சிஷ்ட கணபதி மந்திரம் இல்லாமல் உள்ளது.மந்திரம் எங்கே?
ReplyDelete