சித்தர்கள் வழிபடுகின்ற ஒவ்வொரு வகையான லிங்கங்கள்

1
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து சித்தர்கள் வழிபடுகின்ற ஒவ்வொரு வகையான லிங்கங்கள் பற்றிய பதிவுகள் :

பிரம்மா வழிபடுவது ஸ்வர்ண லிங்கம்.

ஸ்ரீ கிருஷ்ணர் வழிபடுவது கருங்கல்லிலான லிங்கம்.

சப்த ரிஷிகள் வழிபடுவது தர்பையிலான லிங்கம்.

அகத்தியர் வழிபடுவது நெல்லில் ஆன லிங்கம்.

சரஸ்வதி வெண்முத்திலான லிங்கம்.

ஸ்ரீராமர் நீலக்கல்லிலான லிங்கம்.

வருணன் ஸ்படிக லிங்கம்.

சித்தர்கள் மானச லிங்கம்.

புதன் சங்கு லிங்கம்.

கணேசர் கோதுமை லிங்கம்.

கருடர் அன்ன லிங்கம்.

அஸ்வினி தேவர் களிமண் லிங்கம்.

காமதேவர் வெல்லத்திலான லிங்கம்.

போகர் மரகத லிங்கம்.

இராவணன் சாமலி எனும் மலரின் மரப்பட்டையிலான லிங்கம்.

ராகு பெருங்காயத்திலான லிங்கம்.

நாரதர் ஆகாச லிங்கம்.

செவ்வாய் வெண்னையிலான லிங்கம்.

நட்சத்திரங்கள் தங்கள் ஒளிக்கொண்டு வழிப்படும்.

பிரம்ம ராக்ஷசர்கள் எலும்பிலான லிங்கம்.

ஊர்வசி குங்குமப்பூவிலான லிங்கம்.

டாகினிகள் மாமிசத்திலான லிங்கம்.

மேகங்கள் நீருள்ள மேக லிங்கம்.

பரசுராமர் சோளத்திலான லிங்கம்.

பசுக்கள் பால்நிறைந்த மடியிலுள்ள லிங்கம்.

பறவைகள் ஆகாச லிங்கம்.

வாசுகி விஷ லிங்கம்.

கடல்வாழ் மீன்கள் வ்ரிஷகபி எனும் லிங்கம்.

சுப்பிரமணியர் வழிபடும் லிங்கம் பாஷாணத்திலான லிங்கம்.

Post a Comment

1 Comments
  1. 18 சித்தர்கள் வழிபடும் லிங்கத்தின் பெயர்கள் தெரிந்தாள் நன்றாக இருக்கும்.
    நன்றி.

    ReplyDelete
Post a Comment
To Top