நட்சத்திரங்களின் அடிப்படையில் இந்நாள் மேல்நோக்கு நாள், இந்நாள் கீழ்நோக்கு நாள் என நாம் அறிகிறோம்.
மேல்நோக்கு நாள் :
உத்திரம், உத்திராடம், ரோகிணி, பூசம், திருவாதிரை, அவிட்டம், திருவோணம், சதயம், உத்திரட்டாதி ஆகிய ஒன்பது நட்சத்திரங்களும் மேல்நோக்கு நட்சத்திரங்கள் ஆகும். இந்த நட்சத்திரங்களை கொண்ட நாட்களே மேல்நோக்கு நாட்கள் என்று குறிப்பிடப்படுகிறது.
இந்த நாட்களில் மேல்நோக்கி செய்யும் வேலைகளை தொடங்குவது சிறந்தது. அதாவது கட்டிடம் எழுப்புவது, மரங்களை நடுவது போன்று மேல்நோக்கி வரக்கூடிய வேலைகளை செய்யலாம்.
கீழ்நோக்கு நாள் :
கிருத்திகை, பரணி, பூரம், ஆயில்யம், விசாகம், மகம், மூலம், பூராடம், பூரட்டாதி ஆகிய ஒன்பது நட்சத்திரங்களும் கீழ்நோக்கு நட்சத்திரங்கள் ஆகும். இந்த நட்சத்திரங்களை கொண்ட நாட்களே கீழ்நோக்கு நாட்கள் என்று குறிப்பிடப்படுகிறது.
இந்த நாட்களில் கீழ் நோக்கி செய்யும் வேலைகளை துவங்குவது சிறந்தது. அதாவது கிணறு தோண்ட ஆரம்பிப்பது, போர் போடுவது, சுரங்கம் தோண்டுவது என கீழ் வரக்கூடிய பணிகளை செய்யலாம்.
சமநோக்கு நாள் :
அஸ்தம், அஸ்வினி, அனுஷம், மிருகசீரிஷம், சுவாதி, புனர்பூசம், சித்திரை, கேட்டை, ரேவதி ஆகிய ஒன்பது நட்சத்திரங்களும் சமநோக்கு நட்சத்திரங்கள் ஆகும். இந்த நட்சத்திரங்களை கொண்ட நாட்களே சமநோக்கு நாட்கள் என்று குறிப்பிடப்படுகிறது.
இந்த நாட்களில் சமமாக செய்யும் வேலைகளை துவங்குவது சிறந்தது. அதாவது சாலை அமைப்பது, வீட்டிற்கு தளம் அமைப்பது, வயல்களை உழுவது போன்ற வேலைகளை செய்யலாம்.
Useful information
ReplyDelete