நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து சங்கங்கள் போக்கும் பைரவாஷ்டமி பற்றிய பதிவுகள் :

பைரவ வழிபாட்டிற்கு வளர்பிறை மற்றும் தேய்பிறை அஷ்டமி, தேய்பிறை சஷ்டி, மாத பரணி நட்சத்திரம் மற்றும் ஞாயிறு மாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரை மிகவும் ஆற்றல் அளிக்கும் நாட்களாகும்.

பைரவருக்குண்டான‌ பொது காயத்ரி

சுவாநத் வஜாய வித்மஹே 
சூலஹஸ்தாய தீமஹி
தந்தோ பைரவ பிரசோதயாத் 

பைரவரின் காயத்ரியை அஷ்டமி தினத்தில் சொல்லி வரலாம். அருகில் இருக்கும் ஆலயத்துக்குச்s சென்று பைரவரை வழிபடலாம். நவக்கிரக தோஷங்கள் நீங்க சதுர்கால பைரவருக்கு செவ்வரளி பூவால் 9 வாரங்கள் சகஸ்ரநாமா அர்ச்சனை செய்ய வேண்டும். வறுமை நீங்க வளர்பிறை அஷ்டமிகளில் ராகு கால நேரத்தில் வில்வம் மற்றும் வாசனை மலர்களால் அஷ்டோத்திரமோ, சகஸ்ரநாமமோ அர்ச்சனை செய்து 11 பைரவ தீபங்கள் ஏற்ற வேண்டும். அஷ்டமிகளில் தொடர்ந்து வழிபடவேண்டும்.

வியாழக்கிழமை தேய்பிறை அஷ்டமி அன்று பைரவருக்கு சந்தனக்காப்பு அணிவித்து, மஞ்சள் நிற மலர்களால் மாலை சூட்டி, பால் பாயசம், சுண்டல், நெல்லிக்கனி, ஆரஞ்சு, புளிசாதம் படைத்து அர்ச்சனை செய்தால் செல்வச் செழிப்பு ஏற்படும்.

வியாழக்கிழமை: தனுசு, மீனம் ராசிக்காரர்கள் இந்த கிழமையில் பைரவரை வழிபடுவது சிறப்பான பலன்களை தரும் . இந்த கிழமையில் விளக்கேற்றி வந்தால் ஏவல், பில்லி சூன்யம் விலகும்.

Post a Comment

Previous Post Next Post