1. உமிழ்நீரைக் கூட விழுங்காத விரதம் உண்டு. இதை யோகிகள் மட்டும் கடைப்பிடிப்பார்கள்.
2. தேன் அல்லது இளநீர் இவற்றில் ஒன்றை மட்டும் எடுத்துக் கொண்டு உபவாசம் இருப்பது.
3. பசும்பாலை மட்டும் அருந்தி விரதம் இருத்தல்.
4. நீரை மட்டும் அருந்தி 12 நாட்கள் உணவு எடுக்காமல் உபவாசம் இருத்தல்.
5. காலை நேரம் மட்டும் உணவு எடுத்துக் கொள்ளுதல்.
6. மதியம் நேரம் மட்டும் உணவு எடுத்துக் கொள்ளுதல்.
7. இரவு நேர உணவை மட்டும் சாப்பிட்டு உபவாசம் இருத்தல்.
8. 3 நாட்கள் தொடர்ந்து காலை உணவு மட்டும் எடுத்து உபவாசம் இருப்பது.
9. 3 நாட்கள் தொடர்ந்து பகல் உணவு மட்டும் எடுத்து உபவாசம் இருப்பது.
10. 3 நாட்கள் தொடர்ந்து இரவு உணவு மட்டும் எடுத்து உபவாசம் இருப்பது.
11. வெறும் பசும்பால் மட்டும் அருந்தி 21 நாட்கள் கடுமையான விரதம் இருப்பவர்கள் உண்டு.
12. 3 நாட்கள் பகல் வேளையில் மட்டும் மூன்று கைப்பிடி உணவை மட்டும் எடுத்துக் கொண்டு உபவாசம் இருப்பது.
13. 3 நாட்கள் இரவு வேளையில் மட்டும் மூன்று கைப்பிடி உணவை மட்டும் எடுத்துக் கொண்டு உபவாசம் இருப்பது.
14. ஒருநாள் பகல் நேரத்தில் எள்ளுப் புண்ணாக்கு மட்டும் உணவாக எடுத்துக் கொண்டு உபவாசம் இருப்பது.
15. ஒருநாள் இரவில் மட்டும் பசும்பால் மட்டும் அருந்தி விரதம் இருப்பது.
16. ஒருநாள் முழுவதும் மோர் மட்டும் அருந்தி உபவாசம் இருப்பது.
17. ஒரு நாள் மோரை மட்டும் அருந்தி உபவாசம் இருத்தல்.
18. ஒரு நாள் முழுவதும் நீரை மட்டும் அருந்தி உபவாசம் இருப்பது.
19. ஒரு நாள் முழுவதும் புழுங்கல் அரிசி வறுத்து நன்கு பொடி செய்து அதில் நெய், தேங்காய் துருவல், சர்க்கரை ஆகியவை போட்டு பிசைந்து பொரிமாவு செய்து அதை மட்டும் சாப்பிட்டு உபவாசம் இருத்தல்.
20. ஒரு நாள் முழுவதும் திணை மாவு மட்டும் எடுத்துக் கொண்டு உபவாசம் இருப்பது.
21. தேய்பிறையில் ஆரம்பித்து வளர்பிறை முடிந்து மீண்டும் தேய்பிறை ஆரம்பிக்கும் நாட்கள் வரை, தினமும் ஒரே ஒரு கைப்பிடி அன்னத்தை மட்டும் சாப்பிடுவதும், அதன் பின்னர் வரும் சுக்லபட்சம் வரை ஒவ்வொரு கைப்பிடி அன்னத்தை அதிகமாக்கிக் கொண்டு, சுக்ல பட்சம் முடிந்த பின்னர் மீண்டும் ஒவ்வொரு கைப்பிடி அளவு அன்னமாக குறைப்பது என உபவாசம் இருப்பது உண்டு.
22. ஒரு நாள் முழுவதும் வில்வ இலையை போட்டு வைத்த நீரை மட்டும் அருந்து உபவாசம் இருப்பது.
23. ஒரு நாள் முழுவதும் அரச மர இலையை போட்டு வைத்த நீரை மட்டும் அருந்து உபவாசம் இருப்பது.
24. ஒரு நாள் முழுவதும் அத்தி மர இளந்தளிர்களையும் போட்டு வைத்த நீரை மட்டும் அருந்து உபவாசம் இருப்பது.
25. இரு வேளை உணவை எடுத்துக் கொண்டு உபவாசம் இருத்தல்.
26. முதல் நாள் பகல் வேளை உணவு மட்டும் எடுத்துக் கொண்டும், மறுநாள் இரவு நேர உணவு மட்டும் எடுத்துக் கொண்டு உபவாசம் இருத்தல்.
27. மாமிச உணவுகள், மசாலாக்கள் இல்லாத சுத்தமான சைவ உணவுகளை மட்டும் குறைந்த அளவு எடுத்துக் கொண்டு உபவாசம் இருப்பது.
பூண்டு, வெங்காயம், வாழைக்காய், பெருங்காயம் ஆகியவை சேர்க்காத உணவுகளை மட்டும் சாப்பிட்டு உபவாசம் இருத்தல்.
ஒருவரின் உடல் நிலை, ஆரோக்கியத்தைக் கருத்தில் கொண்டு மேலே குறிப்பிட்ட உபவாசத்தை நீங்களே தேர்வு செய்து கொள்ளலாம்.
பொதுவாக உணவு எடுத்துக் கொள்ளாமல், நீர் மட்டும் அருந்தி இருப்பதற்கு பெயர் தான் உபவாசம்.
விஷேச நாட்களும் விரதமும்
ஒவ்வொரு தெய்வங்களுக்கு உரிய விசேஷ தினங்கள் உள்ளன. அப்போது அந்த தெய்வங்களை வணங்கி, அவரின் அருளைப் பெறும் விதமாக விரதம் இருப்பது வழக்கம். உதாரணமாக விநாயகர் சதுர்த்தி, மகா சிவராத்திரி, கிருஷ்ண ஜெயந்தி, ராம நவமி, சஷ்டி விரதம், ஐயப்பனுக்கான கார்த்திகை மாத விரதம் என பல விரதங்கள் உள்ளன.
விரதத்தை ஆன்மிக ரீதியாக மட்டுமல்லாமல். அறிவியல் ரீதியாகவும் உடலுக்கும், உள்ளத்திற்கும் உகந்தது என்கின்றனர்.
உலகில் மனிதனுக்கு போதும் என்ற எண்ணம் தோன்றுவது உணவருந்தும் போது தான். ஒருவர் வயிறு நிரம்பி, மனதார வாழ்த்தினால் அனைத்து செல்வங்களும் தேடி வரும்.