விரதங்களும் அவற்றின் வகைகளும்

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து விரதம் பற்றிய பதிவுகள் :

விரதம் என்பது உண்ணாமல் இருத்தல் அல்லது உணவைச் சுருக்குதல் எனப்படுகிறது. நோன்பு, உபவாசம் என்பவை விரதத்துடன் தொடர்புடையதாகும். உபவாசம் என்பது இறைவனின் பெயரை நினைத்து அவனருகே வசித்தல் என்றும், அவனின் நினைத்து தியானித்து, பல நாட்கள் உண்ணாமல் இருப்பதாகும்.

விரதம் என்பது ஒரு விசேஷ நாளில் ஒரு குறிப்பிட்ட தெய்வத்தை நினைத்து ஐம்புலனை அடக்கி, உண்ணாமல் இருக்கும் நிலை ஆகும். விரதம் இருப்பதால் மனம், புத்தி, உடல் முதலியவை தூய்மை அடையும்.

விரதத்தில் இரண்டு வகைகள் உள்ளன. 

1. சாகம் (எதிர்ப்பார்ப்புடன் செய்வது) 
2.நிஷ்காம் -(எதிர்பார்ப்பு இல்லாத நிலை)

விரதம் எப்படி இருக்க வேண்டும் என்றும், விரதமிருக்கும் போது என்ன செய்யக்கூடாது என்பதைப் பற்றியும் நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவின் மூலம் விரிவாக தெரிந்துகொள்ளலாம்.

1. விரதம் இருக்கும் முந்தைய நாளே வீட்டை நன்றாக கழுவி, மெழுகி, கோலம் போட்டு தயார்ப்படுத்த வேண்டும்.

2. விரதம் இருக்கும் நாளில் கண்டிப்பாக கோபப்படுதல் கூடாது.

3. பூஜை அறையை முதல் நாளே நன்றாக சுத்தம் செய்து புனிதமான அறையாக மாற்றவும்.

4. சுவாமி படங்களுக்கு சந்தனம், குங்குமம் வைக்கவும்.

5. விரத தினத்தில் அதிகாலை வீட்டை சுத்தப்படுத்தி, குளித்து சுத்தமான ஆடையை அணியவும்.

6. பூஜை தொடங்கும் போது எந்த தெய்வத்திற்காக விரதம் இருக்க நினைத்தாலும், முதலில் விநாயகரை வணங்கி விரதத்தை தொடங்க வேண்டும்.

7. வீட்டிலுள்ள அனைத்து தெய்வங்களுக்கும் நறுமணமுள்ள மலர்களை சூடுங்கள்.

8. எந்த தெய்வத்தின் அனுக்கிரகம் பெற வேண்டி விரதம் இருக்க நினைக்கிறீர்களோ, அந்த தெய்வத்தின் திருவுருவ படம் வீட்டில் இருக்க வேண்டும்.

9. பூஜை அறையில் ஐந்து முக விளக்கு ஏற்றி கவச (கந்த சஷ்டி கவசம்) பாராயணம் செய்து வணங்கவும்.

10. விரத நாளில் கண்டிப்பாக அசைவ உணவுகள் சாப்பிடக் கூடாது.

11. விரத நாளில் எந்த தெய்வத்தை நினைத்து விரதமிருக்கின்றீர்களோ, எந்நேரமும் அந்த தெய்வத்தை சிந்தையில் நிறுத்திக் கொள்வது அவசியம்.

12. அந்த நாள் முழுவதும் அந்த தெய்வத்திற்குரிய மந்திரங்கள், ஸ்லோகங்கள், தெய்வ புராணக் கதைகளை படிக்கலாம்.

14. எந்த விரதம் இருந்தாலும் இறுதியில் ஒரு ஏழை நபருக்காவது அன்னதானம் செய்தால் மட்டுமே அந்த விரதம் முழுமையடையும்.

முக்கியமான எட்டு வகை விரதங்கள்

1. அதிகிரிச்சா விரதம்

2. சந்தாபண விரதம்

3. மஹாசந்தாபண விரதம்

4. தப்த கிரிச்சா விரதம்

5. பிரசமத்திய (அ) கிரிச்சா விரதம்

6. சாந்தாராயன விரதம்

7. பராக விரதம்

8. பதகிரிச்ச விரதம்

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top