பிள்ளைப்பேறு இல்லாதவர்கள், இக்கோவிலுக்கு வந்து வழிபட்டால் பிள்ளைப்பேறு கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது.
இதனால் பிள்ளைப்பேறு இல்லாதவர்கள், நீண்ட நாட்களாக திருமணம் ஆகாத கன்னிப்பெண்கள் இக்கோவிலுக்கு வந்து தாங்கள் அணிந்துள்ள ஆடைகளுடன் நீராடி அந்த ஆடைகளை அங்குள்ள தீர்த்த குளத்தில் விட்டு விட்டு வேறு ஆடை அணிந்து கொண்டு நாகநாதருக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தி ஐந்து தலைகளுடன் கூடிய நாகச்சிற்பங்களை (கல், வெள்ளி, தங்கத்தில்) காணிக்கையாக வைத்து செலுத்துகின்றனர்.
பக்தர்கள் இவ்வாறு வைத்துள்ள ஆயிரக் கணக்கான கல்லினால் ஆன நாக சிற்பங்கள் கோவில் வளாகம் முழுவதும் நிறைந்து கிடக்கிறது.
இந்த கோவிலில் ஒரு சுனை உள்ளது. இந்த சுனையில் பங்குனி மாதத்தில் குறிப்பிட்ட நாளில் தண்ணீர் மட்டம் ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு வரும். அப்போது கடவுள் வழிபாட்டின்போது இசைக்கப்படும் இசைக்கருவிகளின் ஒலி கேட்பதாக சொல்லப்படுகிறது.
பூமிக்கு கீழ் ஆதிசேஷன் நடத்தும் வழிபாட்டு நிகழ்ச்சியின் ஒலியாகும் இது என கோவிலின் கர்ண பரம்பரை கதை தெரிவிக்கிறது.
கோவிலின் அமைப்பை பொதுவாக காணும்போது இது பல முறை புதுப்பிக்கப்பட்டிருக்க வேண்டும் என தெரிகிறது. தொண்டைமான் மன்னர் ராமச்சந்திர தொண்டைமான் காலத்தில் கோவில் புதுப்பிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றதாக கோவிலில் உள்ள கல்வெட்டு செய்தி தெரிவிக்கிறது.
திருவிழாக்கள் :
வழக்கமான சிவன் கோவில்களில் நடைபெறும் பூஜைகள் இந்த கோவிலிலும் நடைபெறுகிறது.
புதுக்கோட்டையில் இருந்து பொன்னமராவதி செல்லும் பஸ்சில் ஏறி பேரையூர் விலக்கு என்ற இடத்தில் இறங்கி பின்னர் அங்கிருந்து ஆட்டோக்களின் வாயிலாக கோவிலுக்கு செல்லலாம். மெயின் ரோட்டில் இருந்து கோவில் அமைந்துள்ள 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு நடந்தும் செல்லலாம்.
இதேபோல் காரைக்குடி, மதுரை பகுதிகளில் இருந்து இக்கோவிலுக்கு பஸ் மற்றும் ரெயில் மூலம் வரும் பக்தர்கள் நமணசமுத்திரத்தில் இறங்கி பின்னர் அங்கிருந்து பேரையூர் கோவிலுக்கு செல்லலாம். ஆட்டோ, டவுன் பஸ் வசதியும் உண்டு.