அதிர்ஷ்டத்தை தரும் ஆவணி மாத பௌர்ணமி

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து அதிர்ஷ்டத்தை தரும் ஆவணி மாத பௌர்ணமி பற்றிய பதிவுகள் :

ஆவணி மாதத்தில் தான் ஆவணி திருவோணம், ஆவணி அவிட்டம், விநாயகர் சதுர்த்தி போன்ற தெய்வீக சிறப்புமிக்க தினங்கள் வருகின்றன. அது போன்றே இம்மாதத்தில் வருகின்ற பௌர்ணமி மற்றும் அமாவாசை தினங்களும் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றன.

ஆவணி மாத பௌர்ணமியில் விரதமிருந்து விளக்கேற்றி வழிபடுவதன் மூலம் தீராத கடன்கள் தீரும். பண வரவு அதிகரிக்கும்.

அதுமட்டுமின்றி ஒவ்வொரு கிழமையிலும் வரும் பௌர்ணமிக்கு ஏற்றார்போல் வழிபாடு செய்தால் மேலும் சிறப்பான பலன்களைப் பெறலாம்.

ஆவணி மாதத்தில் பௌர்ணமியானது பொதுவாக அவிட்ட நட்சத்திரத்தில் தான் வரும்.

அந்த வகையில் ஆவணி மாத பௌர்ணமியான இன்று அம்பிகையை மனமுருகி வழிபட்டால் கடன் தொல்லைகள் நீங்கி, மகிழ்ச்சியுடன் வாழலாம்.

இந்நாளில் என்ன செய்யலாம்?

ஆவணி மாத பௌர்ணமியான இன்று அம்பிகைக்கு நான்கு வண்ணங்கள் கொண்ட ஆடையை அணிவித்து, மல்லிகை மலர்கள் சூட்டி, அர்ச்சனை செய்து, ஆபரணங்களை அணிவித்து பூஜை செய்ய வேண்டும். 

மேலும் நாட்டு சர்க்கரையால் அபிஷேகம் செய்து, முக்கனிகள், கற்கண்டு, பொங்கல் மற்றும் நெய் சாதம் ஆகியவற்றை நைவேத்தியமாக படைக்க வேண்டும். 

இந்த பூஜையை செய்வதன் மூலம் திருமணத்தடைகள் நீங்கும், பிரிந்த தம்பதியினர் ஒன்று சேர்வர், தீராத கடன்கள் தீரும் மற்றும் பண வரவு அதிகரிக்கும்.

பௌர்ணமி தினத்தன்று அன்னை தேவி பராசக்தியை வழிபடுவதும், சத்ய நாராயணன் பூஜையை செய்வதும் மிகவும் சிறப்பானதாகும்.

பலன்கள் :

ஆவணி மாதம் வரும் பௌர்ணமியில் விரதம் இருந்தால் கடன் தொல்லைகள் நீங்க வழிவகுக்கும். 

இந்நாளில் அம்பிகையை துதித்து விளக்கேற்றி, நெய் கலந்த சாதத்தை நைவேத்தியமாக வைத்து வழிபாடு செய்தால் செல்வம் பெருகும் மற்றும் மேலோங்கி இருக்கும் கடன் பிரச்சனைகள் படிப்படியாக குறையும்.

இன்றைய தினத்தில் அம்பிகையை விளக்கேற்றி வழிபட சகோதர வாழ்வு மேம்படும்.

ஆவணி அவிட்டம் என்றால் என்ன

ஆவணி அவிட்டம் எனும் ஆண்டு சடங்கு உபநயனம் செய்து கொண்ட பிராமணர் ஆடி அல்லது ஆவணி மாதத்தில் அவிட்டம் நட்சத்திரத்தோடு வரக்கூடிய பெளர்ணமி தினத்தில் கடைப்பிடிக்கப்படும் மகத்தான வழிபாடு நாளாகும்.

இது தினத்தை ரிக், யசுர் வேதிகள் கொண்டாடும் தினமாகும். சாம வேதிகள் விநாயகர் சதுர்த்தி அன்று கொண்டாடுவார்கள். இது ஒரு கூட்டு வழிபாடாகும்.

ஆவணி அவிட்டம் விரத நியமங்களைக் கடைப்பிடித்து பூணூல் அணிந்து கொண்டவர்களுக்கு எவ்வித துன்பங்களும் நெருங்காது. எதிரிகளின் தொல்லை குறைந்து முன்னேற்றம் ஏற்படும்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top