சுடுகாட்டில் வசிக்கும் சிவபெருமான்

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து சுடுகாட்டில் வசிக்கும் சிவபெருமான் பற்றிய பதிவுகள் :

மயானத்தை 'காயந்த்த' என்றழைப்பார்கள். 'காயா' என்றால் உடல். 'அந்த்த' என்றால் முடிவு. அதாவது உடல் முடியும் இடம். இதை 'ஜீவந்த்த' என்று சொல்லாமல் 'காயந்த்த' என்றே சொல்கிறார்கள். அதாவது, இது உயிர் முடியும் இடமல்ல, உடல் மட்டும் முடிவுறும் இடம். இந்த மண்ணில் இருந்து நீங்கள் எடுத்து சேர்த்த அனைத்தையும் இங்கேயே விட்டுவிட வேண்டும்.

ஊரெங்கும் நடக்கும் பலவற்றுள், 'உண்மை' யாக நடக்கும் ஒன்றே ஒன்று. அதுவும் மயானத்தில் தான் நடக்கிறது. அதனால் சிவன் தன் இருப்பிடத்தை 'ஷ்மஷான்'த்திற்கு (மயானம்) மாற்றிக் கொண்டார். 'ஷ்ம' என்றால் சவம், இறந்தவரின் உடல். 'ஷான்' என்றால் படுக்கை. வாழ்பவர்களின் மத்தியில் இருப்பது நேர விரயம் என்றுணர்ந்த சிவன், இறந்தவர்களின் உடல் இருக்கும் இடத்திற்கு வசிக்க சென்றார். எந்த இடத்தில் வாழ்க்கையின் அர்த்தம் மிகத் தெளிவாக விளங்குமோ, அவ்விடத்திலே சிவன் அமர்ந்தார்.

சிவனை அழிக்கும் சக்தி என்று சொல்வார்கள். இது ஏதோ அவருக்கு நம்மை அழிப்பதில் அவ்வளவு ஆசை என்று அர்த்தமல்ல. மயானத்தில் அவர் நமது 'உடல்' அழிவதற்காகக் காத்திருக்கிறார். காரணம் ஒருவரின் உடல் அழியும் வரை, அவரின் சுற்றத்தாருக்கும் கூட மரணம் என்றால் என்ன என்பது தெளிவாகப் புரிவதில்லை. 

அதனால் தான் சிவன், "உண்மை" விளங்கும் இடமான மயானத்தில் அமர்ந்திருந்தார்.

எங்கும் நிறைந்திருக்கும் அந்த பரஞ்சோதி நாம் இறந்த பிறகும் நம்மை காத்து ரட்சிக்க சுடுகாட்டிலும் இருக்கிறார். உயிரானது உடலை விட்டு பிரிந்தாலும் நம்மை விட்டு எப்போதும் பிரியாது.

நம் ஆன்மாவை காத்து ரட்சிக்கும் அந்த ஈசனை, நமக்கான அனைத்து நலன்களையும் புரியும் அவரை போற்றுவதே இந்த மானிட பிறப்பின் பாக்கியமாக கருதுவோம்.

தென்னாடுடைய சிவனே போற்றி! 
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி! 
ஆரூர் அமர்ந்த அரசே போற்றி! 
சீரார் திருவையாறா போற்றி! போற்றி!.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top