பாவத்தை போக்கும் புரட்டாசி மாத பெருமாள் தரிசனம்

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து பாவத்தை போக்கும் புரட்டாசி மாத பெருமாள் தரிசனம் பற்றிய பதிவுகள் :

புரட்டாசி மாதத்தில் பெருமாள் கோவிலுக்கு சென்று இந்த 3 விஷயங்களை செய்தாலே போதும். நீங்கள் செய்த பாவங்கள் அத்தனைக்கும் விமோசனம் கிடைத்து விடும்.

மனிதர்களாக பிறவி எடுத்தவர்களுக்கு எப்போதுமே ஒரு பழக்கம் உண்டு. தங்களுக்கு வாழ்க்கையில் ஏதாவது கஷ்டம் வந்துவிட்டால், தங்களுடைய வாழ்க்கையில் ஏதாவது தவறு நடந்துவிட்டால், அதற்கான பழியை தூக்கிப் அடுத்தவர்களின் மேல் போடுவது. ஆனால் நம்முடைய வாழ்க்கையில் நமக்கு ஏற்படக்கூடிய கஷ்டங்களுக்கும் பிரச்சனைகளுக்கும் நாம் செய்த கர்ம வினைகள் தான் காரணம் என்பதை யாருமே உணர்வது கிடையாது. 

நாம் செய்த பாவ புண்ணிய கணக்குகளுக்காக தான் கடவுள் நமக்கான தண்டனையை கொடுக்கின்றான். இனி உங்களுடைய வாழ்க்கையில் கஷ்ட நஷ்டங்கள் ஏற்பட்டாலும் சரி, துன்பங்கள் வந்தாலும் சரி, அதை எப்படி சரிசெய்வது என்று சிந்தித்து அதற்கான முயற்சிகளை எடுங்கள். அனாவசியமாக அடுத்தவர்களை குறை சொல்ல வேண்டாம் எந்த ஒரு நல்ல தகவலோடு இந்த பதிவினை தொடர்வோம். 

நாம் செய்த கர்ம வினைகளை பாவங்களை கழிப்பதற்கு சாஸ்திர ரீதியாக நமக்கு நிறையவே வழிபாட்டு முறைகள் சொல்லப்பட்டுள்ளன. அதில் ஒரு சுலபமான பெருமாள் வழிபாட்டினை பற்றித்தான் நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவின் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். 

பெருமாள் வழிபாடு புண்ணியத்தை சேர்ப்பது. பெருமாள் கோவிலுக்கு சென்று பெருமாளை தரிசனம் செய்து விட்டு வந்தாலே போதும். நமக்கு அது புண்ணியம் தான். இருப்பினும் பெருமாள் கோவிலுக்கு சென்று பெருமாளை வணங்குவதற்கு என்று சாஸ்திரத்தில் சில வழிமுறைகள் குறிப்பிடப்பட்டுள்ளது. 

முறைப்படி நம் பெருமாள் கோவிலுக்கு சென்றால் இந்த மூன்று விஷயங்களை கட்டாயம் செய்தே ஆகவேண்டும். அது என்னென்ன விஷயங்கள். 

முதலாவது பெருமாள் கோவில் தீர்த்தம். நம்முடைய உடலில் கண்ணுக்கு தெரியாத எந்த பிணி இருந்தாலும் அதை தீர்க்க கூடிய சக்தி, இந்த பெருமாள்கோவில் தீர்த்தத்திற்கு உண்டு என்று சொன்னால் அது மிகையாகாது. தீர்த்த ரூபத்தில் நம் கையில் வருவது அந்த பெருமாள் தான். ஆக பெருமாள் கோவிலுக்கு சென்றால் கட்டாயமாக தீர்த்தத்தை வாங்கி பருகிக் கொள்ளுங்கள். 

இரண்டாவதாக துளசி. பெருமாளுக்கு சூடியிருக்கும் துளசியை நம் கையில் வாங்கி நம் கண்களில் ஒற்றிக் கொண்டாலே போதும் பெருமாளின் அன்பினை நாம் முழுமையாகப் பெற்று விடலாம். பெருமாளின் அன்பை பரிபூரணமாக பெற வேண்டும் என்றால் பெருமாள் கோவில் துளசியை கட்டாயம் நம் கைகளில் வாங்கி, நம் வீட்டிற்கு எடுத்து வர வேண்டும். பெருமாள் கோவிலில் கொடுக்கும் துளசியை தலையில் வைத்துக் கொள்ளக் கூடாது என்பதும் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம். 

இறுதியாக சொல்லப்படுவது சடாரி. இதுதான் நம்முடைய தலையெழுத்தை மாற்றக்கூடியது. அந்த பிரம்மா நம்முடைய தலை எழுத்தை எப்படி கிறுக்கி வைத்திருந்தாலும் சரி, அதை சரி செய்யக் கூடிய சக்தி இந்த சடாரிக்கு உண்டு. சடாரிக்கு ‘பாதுகை’ என்ற மற்றொரு பெயரும் இருக்கின்றது. ‘பா’ என்றால் பாவத்தை விளக்குவது என்று பொருள். ‘து’ என்றால் துன்பங்கள் விலகும் என்பதும் பொருள். ‘கை’ என்றால் அந்த பெருமாளே நம்முடைய வாழ்க்கையை கை கொடுத்து மேலே தூக்கி விடுவார் என்பது பொருளாக சொல்லப்பட்டுள்ளது. 

இவ்வாறு நம்முடைய வாழ்க்கையில் இருக்கும் பாவங்கள் விலகி, துன்பங்கள் விலகி, வாழ்க்கையில் மேலே ஏறி வர வேண்டும் என்றால் பெருமாள் வழிபாட்டை மேல் சொன்னபடி தூய்மையான மனதோடு, ஆத்மார்த்தமாக வழிபாடு செய்தாலே போதும். பல நன்மைகள் நம்மை தேடி வரும். 

இந்த புரட்டாசி மாதத்தில் ஒரு நாளாவது பெருமாள் கோவிலுக்கு சென்று பெருமாள் கோவில் தீர்த்தத்தைப் பருகி, பெருமாள் கோவில் துளசியை உங்கள் கையால் வாங்கி, சடாரியை உங்களுடைய தலையில் வைத்து கொள்ளுங்கள். நிச்சயமாக வாழ்க்கையில் பல மாற்றங்கள் ஏற்படும் என்ற நல்ல கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top