லட்சுமியின் அருள் பெற உதவும் புரட்டாசி பௌர்ணமி விரதம்

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து லட்சுமியின் அருள் பெற உதவும் புரட்டாசி பௌர்ணமி விரதம் பற்றிய பதிவுகள் :

புரட்டாசி மாதத்தில் வரும் மஹாளய அமாவாசை மட்டுமல்ல, பௌர்ணமியும் கூடி மிகவும் சிறப்பு வாய்ந்தது. பெருமாளுக்கு உகந்த புரட்டாசி மாதத்தில் வரும் பெளர்ணமி மாகலட்சுமிக்கு ஏற்றதாக கருதப்படுகிறது. இன்றைய நாளில் விரதம் இருப்பதன் மூலம் வீட்டில் லட்சுமியின் அருளைப் பெறலாம்.

லட்சுமியின் அருள் பெற உதவும் புரட்டாசி பௌர்ணமி விரதம்

வீட்டில் லட்சுமி படத்துக்கு மாலை அணிவித்து, குத்து விளக்கில் தூய நெய் ஊற்றி தீபம் ஏற்ற வேண்டும். பிறகு தாமரை மலர்களை சூட்டி சகஸ்ர நாம அர்ச்சனை செய்ய வேண்டும். 

மாலையில் சந்திர உதயத்தைக் கண்டு, அம்பாளையும் தரிசிக்க வேண்டும். இப்படி செய்தால் குடும்பத்தில் அமைதி நிலவும். குழந்தை இல்லாத தம்பதிகள் இணைந்து இந்த பூஜையை செய்தால் விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

புரட்டாசி மாத பெளர்ணமி தினத்தில்தான் தேவர்கள், ரிஷிகள், முனிவர்கள் அம்பிகையை வேண்டி விரதம் இருப்பார்கள். இன்றைய தினம் விரதம் இருப்பதன் மூலம் அவர்களது தவ வலிமை பல மடங்கு அதிகரிக்கும்.

புரட்டாசி மாத பௌர்ணமி தினத்தன்று பூரண பிரகாசத்தோடு அன்னையின் முகம் ஜொலிக்கும். அம்பிகையானவள் சந்திர மண்டலத்தினிடைய அமுதமாய் விளங்குவாள். இதனால் அன்னைக்கு ‘சந்திர மண்டல மத்யகா’ என்ற பெயரும் உண்டு.

இன்றைய தினம் மகாலட்சுமிக்கு மட்டுமல்ல சிவபெருமானுக்கும் ஏற்ற நாள். இன்றைய நாளில் விரதம் இருந்து, வீட்டில் பூஜைகள் செய்து, அருகில் உள்ள மகாலட்சுமி கோவில் அல்லது சிவன் கோவிலுக்கு சென்று பூஜை செய்தால் பலனைப் பெறலாம். திருமணத்துக்காக காத்திருப்பவர்கள் இன்றைக்கு சிவனையும் சந்திரனையும் வழிபட்டால் திருமண பாக்கியம் விரைவில் கைகூடும். சிவ பக்தர்கள் சிவனுக்கு வில்வ அர்ச்சனை செய்து, நெய் தீபங்களை ஏற்றி வழிபட வேண்டும்.

பெளர்ணமி தினத்தில் விரதம் இருப்பது, பூஜைகள் செய்வது, தியானம் செய்வது, மந்திரங்களை உச்சரிப்பது என எல்லாமே ஆன்ம சக்தியை அதிகரிக்கச் செய்யும். நம்மை ஆட்டிப் படைக்கும் தீய சக்தியில் இருந்து விடுவித்து, அருள் கிடைக்கச் செய்யும்.

புரட்டாசி மாத கிரிவலம் பூர்வஜென்ம பாவங்களையும் நீக்கவல்லது. மேலும், இந்த ஜென்மத்தில் நம்முடைய வாழ்வு சிறப்பாக இருப்பதற்கான அருளையும் பெற்றுத் தரும்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top