நன்மையை அளிக்கும் சனிபகவான்

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து சனீஸ்வரர் பற்றிய பதிவுகள் :

சனீஸ்வரன் என்றாலே எல்லோருக்கும் பயம்தான். சனிப் பெயர்ச்சி வரப்போகிறது என்றால் பலருக்கும் அச்சம் வந்துவிடும். சனீஸ்வரன் இடப்பெயர்வு ஆவதால் என்ன என்ன பிரச்னை வருமோ என்றுதான் பலரும் கதிகலங்குகின்றனர். மற்ற எல்லா கிரங்களையும் விட அதிக பிரச்னை கொடுக்கும் கிரகமாக சனி விளங்குகிறது. உண்மையில் சனீஸ்வரன் கெடுதலை மட்டுமே வழங்குபவராக உள்ளாரா என்று நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து விரிவாக தெரிந்துகொள்ளலாம்.

சூரிய தேவனுக்கு இரண்டு மகன்கள். ஒருவர் எமன், மற்றொருவர் சனீஸ்வரன். சூரியனின் மனைவி உஷாதேவி. இவர் தன்னுடைய ஆற்றல் குறைவதாக கருதி சிவனை நோக்கி தவம் புரிய திட்டமிட்டார். அதே நேரத்தில் கணவனை விட்டு பிரியவும் மனம் இல்லை. இதனால், என்னுடைய நிழலை சாயாதேவி என்ற பெண்ணை உருவாக்கி சூரியனுக்கு பணிவிடை செய்யும்படி கூறிவிட்டு தவம் செய்ய புறப்பட்டார்.

சூரியனும் சாயாதேவியை தன்னுடைய மனைவி உஷாதேவி என்று நினைத்து அவருடன் வாழ்ந்தார். இவர்களுக்கு பிறந்தவர்தான் சனீஸ்வரன். நிழலில் இருந்து வந்தவர் என்பதால் சனீஸ்வரன் கருமையாக இருந்தார். சிறுவயதில் இருந்தே சனீஸ்வரனின் செயல்கள் தந்தை சூரியனுக்கு பிடிக்கவில்லை. இதனால், மற்ற குழந்தைகளிடம் அன்பாக இருந்தார். இதனால் சூரியன் மீது சனிக்கு வெறுப்பு ஏற்படுகிறது. வளர்ந்த பிறகு ஒரு கட்டத்தில் விரோதியாகவே கருத ஆரம்பித்தார். தந்தையை விட சக்தி படைத்தவன் ஆக வேண்டும் என்று காசிக்கு சென்று லிங்கம் ஒன்றை எழுந்தருளச் செய்து கடும் தவம் புரிந்தார்.

சனியின் பக்தியை கண்டு அவருக்கு வரம் வழங்க சிவபெருமான் முன்வந்தார். என்ன வரம் வேண்டும் என்று கேட்க, கிரங்களுள் ஒருவராய் இருக்க வேண்டும், என்னுடைய பார்வைக்கே வலிமை அதிகமாக இருக்க வேண்டும். தந்தையை விடவும், உடன் பிறந்தவர்களை விடவும் பலசாரியாக இருக்க வேண்டும். உங்களுக்கு அடுத்த இடத்தை தர வேண்டும் என்றார். இவை அனைத்தையும் வழங்கிய சிவபெருமான், சனிக்கு ஈஸ்வர பட்டத்தை வழங்கினார். அதனால்தான் சனி பகவான் சனீஸ்வரன் என்று அழைக்கப்படுகிறார்.

சனீஸ்வரன் தீமையை மட்டும் வழங்குபவர் இல்லை, அவரவர் பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப நன்மையையும் தீமையையும் வழங்குபவராக உள்ளார். நீதி, நேர்மை, நன்னடத்தை, மன வைராக்கியம் ஆகியவற்றை வழங்குபவராக உள்ளார். தயாள குணம், தர்ம சிந்தனை கடைபிடிப்பவர்களுக்கு பதவிகளை வழங்கி மகிழ்விக்கிறார். ஏழு தலைமுறைக்கும் சொத்து சேர்க்கும் யோகத்தை தரக்கூடியவர் சனீஸ்வரன். சொத்து சேர்ப்பது மட்டுமின்றி அதை கட்டிக்காக்கவும் உதவுகிறார்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top