நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து ஆரோக்கியம் தரும் மந்திரங்கள் பற்றிய பதிவுகள் :

உலகின் எந்த பகுதியாக இருந்தாலும் மருத்துவம், அறிவியலால் முடியாத பல மருத்துவ காரியங்களை பிரார்த்தனைகள் நிறைவேற்றியுள்ளன. மருத்துவர்கள் கை விரித்தாலும் நாம் நம்பும் கடவுள் நம்மைக் கைவிடுவது இல்லை. மருத்துவம் கைவிட்ட நிலையில் நம்முடைய கடைசி நம்பிக்கையாக ஆன்மிகம் இருக்கிறது.

ஆயுர்வேத மருத்துவ முறையின் கடவுளாக தன்வந்திரி விளங்குகிறார். இவர் மகாவிஷ்ணுவின் அம்சமாகப் பார்க்கப்படுகிறார். தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்த போது அதில் இருந்து முதலில் ஆலகால விஷம் வெளிவந்தது. அதைத் தொடர்ந்து கையில் அமிர்த கலசத்துடன் தன்வந்திரி வெளிவந்தார்.

தன்வந்திரியை நோக்கி தினமும் அவருடைய மந்திரத்தை சொல்லி வணங்கி வந்தால், நோய் பயம் நம்மை விட்டு விலகும். நோய்கள் விலகும். ஆரோக்கியம், மகிழ்ச்சி, வளம் பெருகும்.

மந்திரம்:

ஓம் நமோ பகவதே

வாஸுதேவாய! தன்வந்தரயே!

அம்ருத கலச ஹஸ்தாய!

ஸர்வ ஆமய விநாசநாய த்ரைலோக்ய

நாதாய் ஸ்ரீமகாவிஷ்ணவே நம!

அர்த்தம்:

கையில் அமிர்த கலசத்தை ஏந்தியிருக்கும் வாசுதேவனே, தன்வந்திரி பகவானே, எல்லா நோய்க்கும் மருந்தாக, நோய்களைத் தீர்ப்பவனாகா இருப்பவரே, மூன்று உலகிற்கும் அதிபதியான பெருமாளே உன்னை வணங்குகிறோம்.

மிகவும் ஆற்றல் மிக்க குணமாக்கும் இந்த மந்திரத்தை நன்கு மூச்சை இழுத்து நிதானமாக வெளியே விட்டபடி சொல்ல வேண்டும். ஒரு நாளைக்கு 108 முறை இதை சொல்லி வரலாம்.

மிருத்யுஞ்ஜய மந்திரம்:

மிருத்யுஞ்ஜய மந்திரம் சிவபெருமானுக்கு உரியதாகும். வாழ்க்கைக்கு அச்சுறுத்தலாக இருக்கும் எல்லா சூழலிலும் இந்த மந்திரத்தை சொல்லலாம்.

மார்கண்டேயன் இந்த மந்திரத்தை கூறிதான் எமனின் பிடியிலிருந்து தப்பினான் என்று கூறப்படுவது உண்டு. கஷ்ட நேரத்தில் நம்பிக்கையோடு இந்த மந்திரத்தைக் கூறி அதிசயமான பலன்களைப் பெறலாம்.

மந்திரம்:

ஓம் த்ரயம்பகம் யஜாமஹே 
ஸுகந்திம் புஷ்டிவர்த்தனம்
உர்வாருகமிவ பந்தனான் 
ம்ருத்யோர் முக்ஷீய மாம்ருதாத் .

அர்த்தம்:

இயற்கையாகவே நறுமணம் கொண்டவரே, அடியவர்களுக்கு கருணையோடு உணவூட்டி வளர்ப்ப வரும், முக்கண்ணனும் மாகிய சிவ பெருமானே, பழுத்த வெள்ளரிப் பழம், அதற்கும் அதன் கொடிக்கும் எந்த வலியுமின்றி விடுபடுவதுபோல் மரணத்தின் பிடியிலிருந்து எங்களை விடுவிப்பாயாக.

Post a Comment

Previous Post Next Post