சோட்டாணிக்கரை பகவதியை அம்மன்

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து சோட்டாணிக்கரை பகவதியை அம்மன் பற்றிய பதிவுகள் :

அம்மா நாராயணா என்றால், ”பகவான் ஸ்ரீமன் நாராயணனின் இதயத்தில் வீற்றிருக்கும் தாயே!!விரைந்து வந்து என்னைக் காப்பாற்று”என்று பொருள்.

ஐயப்ப பக்தர்கள் தவறாமல் செல்லும் கோவூல்களில் சோட்டாணிக்கரை பகவதி அம்மன் கோவிலும் ஒன்று.

கோவிலின் கிழக்குப் பக்கம் கொடிக் கம்பம் அமைத்துள்ளது. அம்பாள் சன்னிதியும் கிழக்கு முகம் பார்த்தே உள்ளது. இதன் நேர் எதிரே 200 அடி தூரத்தில் திருக்குளம் உள்ளது. குளத்தின் மறுகரையில் உக்கிரகாளியின் சன்னிதி உள்ளது. இதையே கீழ்க்காவு அம்மை என்கின்றனர். இந்த அம்பாள், சோட்டாணிக்கரை தேவியின் தங்கை. கீழ்க்காவு அம்மையை பிரதிஷ்டை செய்தவர் வில்வ மங்கலம் சுவாமிகள்.

இந்த சன்னிதியின் இடது பக்கம் பழமையான பலா மரம் ஒன்று இருக்கிறது. இந்த மரத்தின் மேல் ஆணிகள் அடிக்கப்பட்டுள்ளன. துர்தேவதைகளாலும் மன அதிர்ச்சியாலும் பாதிக்கப்பட்டவர்கள் நோய் குணமடைய இந்த மரத்தில் ஆணி அடிக்கின்றனர்.

குருதி பூஜை :

தினமும் இரவு 8.45 மணிக்கு நடக்கும் ‘குருதி பூஜை’ செண்டை ஒலி முழங்க ஆவேசமாகவும் உணர்ச்சிகரமாகவும் இருக்கும். நீரில் மஞ்சளையும் குங்குமத்தையும் கரைத்து அந்தச் செந்நிற நீரில் செய்யப்படுவதே குருதி பூஜை.

இந்தத் தீர்த்தத்தைத் தெளித்தால் துர்தேவதைகள் விலகி ஓடும் என்பது ஐதீகம். ஒரு காலத்தில் இங்கு உயிர்ப் பலியும் ரத்த பூஜையும் நடந்துள்ளன. காலம் மாறிவிட்டாலும் பழைய பழக்க வழக்கங்களின் நினைவாகவே இன்றும் குருதி பூஜை நடக்கிறது. குருதி பூஜை முடிந்ததும் இந்தச் சிவப்பு நிற தீர்த்தத்தையே பிரசாதமாகத் தருவார்கள்.

பிரம்ம ராட்சசன் :

கீழ்க்காவு அம்மையைப் பார்க்கப் போகும் வழியில் குளத்தின் வடக்கே பிரம்ம ராட்சசன் சன்னிதியைக் காணலாம்.

சன்னிதி என்றால் சுற்றுச் சுவர், கூரை எதுவும் இருக்காது. திறந்தவெளியில் நான்கு சிலைகளை (வனதுர்க்கை, சாஸ்தா,பத்ரகாளி,ராட்சசன்) பிரதிஷ்டை செய்திருப்பார்கள். அந்தக் சிலைகளுக்கு மஞ்சள், குங்குமம் வைத்து கற்பூரமும் ஏற்றுவார்கள்.

சோட்டாணிக்கரை கோவிலில் உபதேவதைகளுக்குப் பூஜை கிடையாது, நைவேத்தியம் மட்டுமே. மூலஸ்தானத்தில் நைவேத்தியம் முடித்து மீதி பிரசாதம் இங்கு படைக்கப்படும்.

கோவிலின் நியதிகள், கட்டுப்பாடுகள் கடுமையானவை. இதனால் தான் சோட்டாணிக்கரை என்றாலே பலருக்கும் பயம் கலந்த பக்தி வருகிறது.

ஜோதியாக வந்தவர் :

ஒரு காலத்தில் இந்தப் பகுதி, காடாக இருந்துள்ளது. இக்காட்டில் வேடுவப் பெண்ணொருத்தி தேவியை வழிபட்டு வந்தாள். அப்போது கோவில் எதுவுமில்லை. தேவியை அரூப ரூபமாக வழிபட்டு வந்தாள்.

ஒரு நாள் அந்த வேடுவப் பெண்ணுக்கு பகவதி, ஜோதி ரூபத்தில் காட்சியளித்தார். இதனால் அந்தப் பகுதியை “ஜோதியான கரை” என்று அழைத்து வந்தனர்.

சோட்டாணிக்கரையில் அதிகாலை நான்கு மணிக்கு நிர்மால்ய தரிசனம். மூலஸ்தானத்தின் கதவு திறந்தவுடன் தீபாராதனையுடன், “அம்மே நாராயண! லட்சுமி நாராயண! பத்ரே நாராயண” என்று கூறி பக்தர்கள் வணங்குவார்கள்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top