ஸ்ரீசக்ர வழிபாடு

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து ஸ்ரீசக்ர வழிபாடு பற்றிய பதிவுகள் :

ஸ்ரீசக்ர ஸ்லோகம் சொல்லி, அம்பாளை வழிபட்டு வந்தால், எதிர்ப்புகள் அனைத்தும் தவிடுபொடியாகும். எதிரிகள் அனைவரும் பின்வாங்கி பதுங்குவார்கள். காரியத்தில் இருந்த தடைகள் அனைத்தும் காணாமல் போகும். மனோதிடம் பெருகும். மனக்கிலேசம் விலகும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

தேவி என்பவளே சக்திதான். சக்தி என்பதுதான் உலகம் முழுக்க வியாபித்திருக்கிறது.

ஸ்ரீசக்கரம் என்பது தனிப்பெரும் சக்தியுடன் திகழ்கிறது. உக்கிரத்தைத் தணிக்கவும் சாந்த சொரூபத்தை வழங்கும் அற்புதத்தை ஸ்ரீசக்ரம் வழங்குகிறது.

ஆதிசங்கரர் பல ஸ்தலங்களுக்கு யாத்திரைகள் மேற்கொண்டார் என்று சரிதம் சொல்கிறது. அப்படிச் சென்ற க்ஷேத்திரங்களில், உக்கிரத்துடன் இருக்கும் அம்பிகையை, சாந்தப்படுத்துவதற்காகவும் சக்தி பீடங்களில் இன்னும் சக்தியைக் கூட்டி வியாபிக்கச் செய்யவும் ஸ்ரீசக்கரப் பிரதிஷ்டை செய்திருக்கிறார் என்பதை பல கோயில்களின் ஸ்தல புராணமும் ஸ்தல வரலாறும் விவரிக்கின்றன.

ஸ்ரீசக்ரத்தை நினைத்துக் கொண்டு மனதார எவரொருவர் பூஜை செய்தாலும் , தேகத்தில் பலம் கூடும். மனதில் இருந்த குழப்பங்கள் அகலும். எடுக்கின்ற காரியங்கள் அனைத்திலும் வீரியம் உண்டாகும். தெய்வ அனுக்கிரகத்துடன் எப்போதும் செயல்படலாம் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

ஸ்ரீசக்ரம் என்பது அம்பிகைக்கு உரியது. இறை வழிபாட்டில் தனித்துவமும் மகத்துவமும் நிறைந்தது. அதனால்தான், ஸ்ரீசக்கரத்துக்கான ஸ்லோகமும் வகுத்து வழங்கப்பட்டிருக்கிறது. தினமும் 11 முறை சொல்லி வழிபடலாம். காலையும் மாலையும் சொல்லி வழிபடலாம்.

முக்கியமாக, அம்பாளுக்கு உரிய நாட்களிலெல்லாம் அதாவது செவ்வாய் வெள்ளியாகட்டும், அம்பாளுக்கு உரிய முக்கிய தினங்களோ பண்டிகைகளோ ஆகட்டும்... இந்த நாட்களில், காலையில் எழுந்து நீராடிவிட்டு, பூஜையறையில் அமர்ந்து, அம்பாளை உபாஸிக்க வேண்டும்.

பிந்து த்ரிகோண வஸுகோண தசாரயுக்ம மன்வச்ர நாகதல சம்யுத ஷோடசாரம் வ்ருத்தத்ரயம் ச தரணி சதன த்ரயம் ச ஸ்ரீசக்ரமேதத் உதிதம் பரதேவ தாயா;

அதாவது, தேவியானவள், ஸ்ரீசக்ரத்தின் நடுவே பிந்துவாக வீற்றிருக்கிறாள். சக்கரத்தைச் சுற்றி ஒன்பது தேவதைகள் உண்டு. ஆவரண தேவதைகள் என்று பெயர். இவர்களில் ஒன்பதாவது தேவதையான லோகமாதா பரமேஸ்வரி தேவி என்பவள், உலகநாயகியாத் திகழ்பவள் சக்கரதேவியாகத் திகழ்கிறாள் என்கிறது சாஸ்திரம்.

இந்த ஸ்லோகத்தை தினமும் 11 முறை சொல்லி வழிபடுங்கள். அப்போது அம்பாளுக்கு இனிப்புகளில் ஏதேனும் ஒன்றை நைவேத்தியம் செய்து பிராத்தனை செய்யவேண்டும். இயலாதவர்கள், உலர் திராட்சை , கற்கண்டு அல்லது வாழைப்பழம் என ஏதேனும் ஒன்றை நைவேத்தியம் செய்து வழிபடலாம்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top